வல்வை. ந.நகுலசிகாமணி.
சீரும் சிறப்பும் பொலிந்து விளங்கும் ஈழத்திருநாட்டின் வடபால் மகுடமெனவிளங்கும் யாழ்ப்பாணத் தின் வளம்பல பெருகும் வடமராட்சியிலே வல்வை நகரசபை எல்லைக்காவல னாக, சைவச்சீரும் தானமும் சிறந்த சிந்தனையும் கொண்ட மாந்தரைத் தொன்மையாகக் கொண்டு விளங்கும், நெய் தல்நிலப்பரப்பிலே அருணகிரிநாதரால் திருப்புகழ்பாடப் பெற்றதும் யோகர்சுவாமிகள்போன்றதவ சிகளால் வழிபாடுகள் செய்யப்பெற்றதும், சிவசம்புப்புலவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் என் போரால் கண்மணிமாலை, திருப்பள்ளி யெழுச்சி போன்றநூல்களைப் பாடிப்பெருமைபெற்றதல மும் தட்சிணகைலயம் (தென்கைலாயபுராணம்) 9ம் அத்தியாயத்திலே வியந்துகூறப்பட்டதுமாகிய கந்தவனப்பதியிலே மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்ற பழமைவாய்ந்த வன்னிமரத்தை தலவிருட்சமாகக் கொண்டவரும் கந்தவனம் கந்தாரண்யம், கந்தசு வாமி கானகம், கந்தவனக்கடவையாகிய சிறப்புநாமங்களையுடைய பதியிலே வள்ளி தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மூலமூர்த்தியாக சண்முகப் பெருமான். இவ்வாலயம் மிகவும் பழமைவாய்ந்தது, 01 -01 -1803 அரோசிமித் உத்தியோகபூர்வமான படத்தின் பிரகாரம் உள்ள ஸ்தலங்களும். குளங்களும் வரைபடத்தில் (Official map) இடம்பெற்ற ஆலயம்.
கர்ணபரம்பரை வரலாற்றைக்கொண்டது வெள்ளரித்தோட்டத்தில் வேலாயுதம் தான்தோன்றிய தாக கூறப்படுகின்றது. வடக்கு வீதியிலுள்ள நறுநீர்க்கேணியும் அதன் அருகே காலம் கணிக்க முடி யாதவன்னிமரங்களுமுள்ளன.
நீர்க்கேணியின் நடுவிலே உள்ள கல்லில் ஆதிகாலத்தில் கற்பூரம் விளைந்ததாக வரலாறு உண்டு. இந்தக் காரணத்தினால் இக்கந்தனை கற்பூரக்கந்தன் என்றுகூறுவதும் உண்டு காஞசிமாவடிவேலர் என்றும் அழைப்பதுண்டு,
உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர் (!829 -1910) அவர்கட்கு முதுமையில் கண்ணொளி மங்கியது என்றும் அவர் கந்தவனக்கடவை ஆறுமுகசுவாமியை விடாதுவேண்டி பாடு கிடந்து கண்ணொளி பெற்றார் என்றும் “கண்ணொளியைத் தந்தாய் மறப்பேனா” எனும் தொடரமைந்த பாடல்களைப் பாடினார்.


