வல்வை. ந.நகுலசிகாமணி.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன்
இவ்வாலயத்தின் வரலாற்றை நோக்கினால் பொருளூதார சமூகவரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகவும் அதற்கு அப்பால் பக்திவரலாற்றுடன் தொடர்புடையதாக வும் உள்ளது.
இங்கு ஓடும் தொண்டமான் ஆறு “வல்லி நதி என்ற பெயருடன் விளங்கியது. இந்த நதியின் தொடு வாயிலை தொண்டமான் என்னும் அரசன் வெட்டிக் கடலுடன் சங்கமிக்க விட் டான். அன்று முதல் இந்நதியின் பெயர் “தொண்டமானாறு” ஆகிவிட்டது. கந்தப்பெருமானது அருளாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாலயத்திற்கு தெய்வீக வரலாறு உண்டு. திருச்செந்தூர் என்னும் பகுதியிலி ருந்து கந்தபெருமான் வீரவாகுத்தேவரை மகேந்திரபுரிக்கு சூரனிடத்தில் தூது அனுப்பினான். வீரவா குத்தேவர் முதன்முதலாக வட இலங் கையின் வல்லிநதிக்கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார். அவரது பாதச்சுவடுகள் இன்றும் ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் பாதச்சுவடுக ளாகக் காட்சிய ளித்துக் கொண்டிருக்கிறது. வீரவாகுத்தேவர் பெருமானது கட்டளைப்படி மகேந்திர புரிக்கு சூரனிடத்திற்சென்று திரும்பிதிருச்செந்தூர் செல்வதற்கு மீண்டும் இந்நதிக் கரைக்கு வந் தார். வந்தபொழுது சந்திக்காலம் ஆகிவிட்டது. எனவே அவருக்குக் கந்தப்பெருமானுக்குரிய சந்திப் பூஜையைச்செய்தார். இவ்வாறு சந்திக்கடன் செய்யப்பட்ட இடம் “சந்நிதி” யாக மருவிச் செல்வச் சந்நிதி என்ற பெயரைப் பெற்றது.
19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்ந்து வந்த பரதகுலத்தவர்களுள் மூத்தவரும், பக்தி மானுமாகிய மருதர் கதிர்காமர் என்பவர் நாள்தோறும் இவ்வாற்றில் மீன்பிடித் துச் சீவியம் நடத்திவந்தார். இவர் மீன்பிடிக்கச்செல்லுமுன்னர் ஐவரசமுனிவர் தியானவழிபாடு செய்து தவமியற்றிய இடமாகிய அவரத பூவரசசமாதி யில் வணங்கியே மீன்பிடிப்பது வழக்கம். பெருமானார் தனது பூஜைசெய்வதற்கு கதிர்காமரேஏற்றவர் எனஎண்ணி தனது தொண்டனாக்கிக் கொள்ள விரும்பினார். நாள் தோறு ம் மீன்பிடிக்கும் கதிர்காமர் முன்பாக மனித உருவிற் தோன்றி என்னிடம் இக்கரைக்கு வா என அழைத்தார். இதைக் கேட்ட கதிர்காமர் ஆற்றின் மேலிருந்து கரைக்கு வந்தார். இவ்வாறு வந்துசேர்ந்தவரை இறைவன் கூட்டிச்சென்று பூவரசமரத்தின் அடியையும் அதனருகில் வீரவாகுத்தேவர் சந்திக்கடன் செய்த இடத்தையும் சுட்டிகாட்டி இதில் பூஜைவ ழிபாடு செய்ய எல்லா வகையிலும் ஏற்றவன் என்று கூறி மறைந்தருளினார். இதைக்கண்ட கதிர்காமர் கலக்கமுற்று “கந்தா இது என்ன சோதனை” நானோ பரதகுலத்தவன் என து தொழிலுக்கும் உனது பூஜை வழிபாட்டிற்குமிடையில் எவ்வளவு தூரம் உள்ளது. எங்களுக்கு இது ஒவ்வாது என கண்ணில் நீர்மல்க கதறியழுது மறுத்துநின்றார். இதைக்கண்ட கந்த பெருமான் “யாமிருகு;கப் பயமேன்” எனக்கூறி பூஜைவழிபாடு செய்யும்படி கூறியபோதும் வழிபாட்டுமுறை தெரியாது எனக்கூறி மறுத்தார். அப்பொழுது எம்பெருமான் “நீ புனிதவல்லி நதியில்மூழ்கி நான்அழைத்தபோது இக்கரைக்குவந்தவுடன் உனது பாவங்கள் கழுவப்பட்டுவிட்டன”. யாம் காட்டும் முறையில் வாய்கட்டி மௌனபூஜை செய்வாய் எனக் கூறியருளினார்.
மருதர் கதிர்காமர் நாள்தோறும் வாழையிலையில் உணவுபடைத்து உண்பது வழக்கம். ஒருநாள் இவர் அமுதுசெய்து உண்பதற்கு உட்கார்ந்தபோது ஒரு அசரீரி வாக்கு இவர் காதில் விழுந்தது. அமுதை நீ உண்பதற்கு முன்னர் ஆற்றங்கரையிலுள்ள பூவரசமரத்தின் அருகில் ஒரு அடியார் மிகுந்த பசியால் களைப்புற்றிருக்கிறார். அவருக்குத் திருவமுது செய்தபின் நீ உண்பாய் எனக்கூறியது. இதைக்கேட்ட கதிர்காமர் தனது அமுதை பொங்கிய பானையுடன் கொண்டு வந்து பூவரசமரத்தின் அருகில் உண்பதற்கு ஆலமிலைகள் போடப்பட்டு உண்ண எவருமில்லாமல் இருப்பதைக்கண்டார். அவர் இறைவனை நோக்கி மனம்நொந்து இரந்து பார்த்தபோது “கதிர்காமர் எனக்குத் திருவமுதைப் படைத்தபின் என்னை உண்ணும்படி கேள் யான் உண்பேன்” என்று கூறக்கேட்ட கதிர்காமர் எம்பெருமானுக்கு ஆலமிலையில் அமுது படைத்தார். இன்றும் இவ்வாலயத்தில் அமுது ஏராளமாக பொங்கப்பட்டு கோயிலுக்குள் பொங்கும்பானையுடன் கொண்டுசென்று ஆலமிலையில் படைக்கப்பட்டு வருகிறது. இது வேறு எந்தவொரு ஆலயத்திலுமில்லாத நடைமுறை யாகும். வழமைபோல் அமுதுபடைத்தபோது பெருமானது திருவருளால் படைத்த ஆறு ஆலமிலை அமுதும் மறைந்துபோகவே அதைக்கண்ட கதிர்காமர் “ஆறுமுகா” எனக் கண் ணீர் சிந்தி “இச்சிறியேன் படைத்த அமுதை ஏற்றுக்கொண்டு என்னையும் ஆட்கொண்டாய் இனி(எனக்கு) உமது பாதாரவிந்தத்தைப்பணிவதும் திருவமுதுபடைப்பதுமே எனது எனக்குமுதல்வேலை உமக்குப்படைத்துபூரித்தபின்பே யானுண்பேன்.” என்றுகூறினார். சந்நிதிவேலவன் அருட்செல்வம், பொருட்செல்வம், கல்விச்செல்வம் இவ்வாறுஎண்ணற்ற வேண்டுவோர் வேண்டுவதை ஈய்ந்தவண்ணம் இருக்கின்றார். அன்னதானக் கந்தனாகவும் காட்சிதருகின்றார். கோயிலைச் சுற்றி 45 மடங்கள் இருக்கின்றன. இவற்றில அன்பர் கள் தம நேர்த்திகள் மூலம் அன்னதானக் கந்தனைக் கொடுக்கிறார்கள். இவ்வாறு சந்நிதிவேலவனின் சிறப்பைக் கூறினால் முடிவில்லாதிருக்கும்.


