தொகுப்பு:- ந. நகுலசிகாமணி.
வல்வை மக்களின்தேவை கருதி பலதரப்பட்ட வர்த்தகங்களை எமது ஊரவர்களும் அயலூர்மக்களும் நடாத்தியிருந்து பெரும்பணியாற்றினார்கள். எமது ஊர் நெய்தல் நிலமாக இருப்பதால் அயல்கிராமங்களான கம்பர்மலை, உடுப்பிட்டி, தொண்டைமானாறு பகுதி களிலுள்ள விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை எமது மரக்கறிச் சந்தைக்குக் கொண்டுவந்து மக்களைத் தன்நிறைவு செய்தனர். பலசரக்குக்கடையில் எமது ஊர் முதலா ளிமார் குடும்பமும் அரச உத்தியோகத்தர்களும் மாதம் மாதம் (கொப்பிக்கு) பொருட்களை வாங்கி மாதம்முடிய பணம் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. வல்வைச்சந்தியைச் சுற்றிவர உள்ள கடைகளான இராசதுரை, திருச்சிற்றம்பலம், சின்னத்துரை, விசுவலிங்கம் போன்ற மற்றும் கடைமுன்பாக மக்களுக்கு கலப்படமற்ற பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக லொறிகளில் வந்திறங்கும் பொருட்களை பெண்களை அழைத்து சம்பளம்கொடுத்து காலைமுதல் மாலைவரை சுளகு கொண்டு புடைத்து சுத்தமாக்கும் காட்சி இன்னும் நினைவில் உள்ளது. ஆனால் இப்போது அந்தவழமை அற்றுப்போய் விட்டது.
- பாரதி நிலைய முத்திராஷா அச்சியந்திரசாலை.
- A.K.பிரதஸ் புத்தகக்கடை, வேல்ஸ்ரூடியோ, ஹாட்வெயர்ஸ் ஸ்ரோர்ஸ், சர்பத்கடை, படம்கள் பிரேம் பண்ணிக் கொடுத்தல்.
- திருச்சிற்றம்பலம் பலசரக்குக்கடை.
- சின்னத்துரை சகோதரர் பலசரக்குமாளிகை.
- விஸ்வலிங்கம் எரிபொருள் நிலையம், பலசரக்குக்கடை.
- எஸ்.வி.சுப்பிரமணியம் பேபிமார்க் குளிர்பானம் (தொழிற்சாலை),
- போட்யாட் ( மீன்பிடி படகு தயாரிக்கும் நிலையம்) ஊரிக்காடு, க.சபாரத்தினம்.
- கண்மணிஅப்பா பலசரக்குக்கடை.
- பொன்னம்பலம் பலசரக்குக்கடை, தெணியம்பை.
- குமார் அச்சகம், உடையாமணல் வீதி திரு.சதாசிவம்.
- சிற்றம்பலம் உணவு, தேநீர்சாலை (சிதம்பரா பாடசாலை முன்பு )
- க.வைத்தியலிங்கம் ( அப்பா ) உணவுச்சாலை (சிதம்பராப் பாடசாலை முன்பு ).
- துரைசிங்கம் புத்தகக்கடை, ஊரிக்காடு.
- சுப்பிரமணியம் ஓட்டுக்கடை, குடைதிருத்தம்.
- துவிச்சக்கரவண்டி, ( வாடகை, திருத்தம் ) சின்னக்கிளி சகோதரர்கள்.
- அரிசி ஆலை, மார்க்கண்டு ஊரிக்காடு.
- கணபதிவிலாஸ் ஜவுளிக்கடை சோதிலிங்கம்.
- எம்.கந்தசாமி அப்பா புத்தகக்கடை, இலங்கை இந்திய சஞ்சிகைகள், பத்திரிகைகள், இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் மூக்குப்பொடி.
- மாணிக்கத்தியாகராஜா ஜவுளிக்கடை.
- மகாலிங்கம் அப்பா பத்திரிகைக்கடை, அம்மன் கோயிலடி.
- சீவரத்தினம் பேக்கரி, பலசரக்குக்கடை.
- மயில்வாகனம் பலசரக்குக்கடை.
- ராஜதுரை ஜவுளிக்கடை.
- நாராணி உணவுக்கடை. வல்வைச்சந்தி.
- அருந்ததி விலாஸ் தேநீர்சாலை ( சிவராசா ).
- இரத்தினசாமி பலசரக்கு கூப்பன்கடை.
- தில்லைக்கனகசபை கொத்துறொட்டி. வல்வையின் முதல் கொத்துறொட்டிக்கடை.
- துரை பேக்கரியும் உணவுச்சாலையும்.
- மகேஸ்வரி பேக்கரி ( தீருவில் ) கு.கதிர்காமத்தம்பி, குட்டியப்பா.
- பாலசுப்பிரமணியம் மா அரைக்கும் மில்.
- தணிகாசலம் பீடாக்கடை, ஆலடி.
- பலநோக்கு கூட்டுறவுக் கடை ( சங்கக்கடை ).
- விஷ்ணு ஹாட்வெயர் ஸ்ரோர்.
- கலாநிதி ஸ்ரோர். ( தணிகாசலம் )
- உரம் விற்பனையாளர். வை.கதிரவேலு, அக்றிகோலாஸ்.
- சாராயத்தவறணை.
- விறகு ஆலை ( அரசினர் ).
- தம்பப்பா மரக்காலை.
- யோகநாயகி படமாளிகை.
- றஞ்சனா படமாளிகை. கு.கதிர்காமத்தம்பி, குட்டியப்பா.
- சிங்காரப்பா பாண்கடை. ( கிழக்கு வீதி ).
- அமரசேனாதிபதி பேக்கரி.
- மீன் சந்தை.
- மரக்கறிச் சந்தை.
- க.ம.கடை ( நெடியகாடு ).
- குயிலர் பலசரக்கு கடை. ( வேம்படி ).
- வெங்கலப் பாண்டவர் கடை. ( வேம்படி )
- ஜெயஜோதி பேக்கரி. கே.எஸ்.தங்கராசா. ( தீருவில்)
- பாலா றாம்ஸ் ஹாட்வெயர் டிரேட்ஸ்.
- விஜயா கடல் இயந்திரங்கள் திருத்தும் நிலையம் ( பாஸ் ஐயா )
- வலைக்கடை ( கடற்றொழில் பொருட்கள் ) த.பொன்னம்பலம்.
- குமரன் மொபைல் மரைன் றிப்பயர் வேக்ஸ்
- s. குமரகுரு ஐஸ்வாடி. ஆலடி.
- ஆர்.வி.ஜி.பிடிகள். வ.வ.இ.ஞானம் அண்ணா.
- K.கணேசு பத்தர்., அ.மி.பாடசாலை ஒழுங்கை
- அபிராமி ஸ்ரோஸ் ( ஆதிகோயிலடி )
- மனோகரா தேயிலை. கனகராசா.
- கலைச்சோலை. அப்பாத்துரை மாஸ்டர்.
- ராசநாயகம் சலூன்.
- பொன்னுத்துரை கடை (ஆதிகோயிலடி )
- பத்திரிகை & பான்சி ஸ்ரோஸ், மு,பிரேம்குமார்.
- சிதம்பரதேவர் தேநீர், மல்லிக்கோப்பி, தயிர்வடை.
- துரை மேத்திரியார் வள்ளம்கட்டும் இடம். வித்தனை
தொண்டைமானாறு
- நவரத்தினம் கடை.
- குட்டிகடை.
- நல்லையா Gas station.
- நாகேந்திரன் சைக்கிள்கடை.
- தம்பிப்பிள்ளை கடை.
- ஐயாமுத்து சலூன்.
- பேபி கடை
- பழனிகடை
- தர்மரத்தினம் கடை.
- பூங்கொடி கடை.
- சிவசம்பு வைத்தியம்.
- விசாகரத்தினம் ஆயுள்வேதம்.
தற்போது இனப்பிரச்சனை காரணமாக இக்கடைகள், தொழில்பேட்டைகள் எல் லாம் அற்றுப்போய்விட்டன. இப்போது உள்ள கடைகளெல்லாம் அடுத்த தலைமுறை யினரது கடைகளே. சண்டைமுடிவடைந்த நிலையில் தன்னிறைவான கடைகள் இல் லாத நிலையில் பருத்தித்துறைக்கும் நெல்லியடிக்கும் வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை. மரக்கறிச்சந்தையிலும் மிகச்சிலரே வைத்திருக்கிறார்கள். ஆனால் சில “சுப்பர் மார்க்கற்” உருவானதில் மக்கள் திருப்தி அடைகின்றனர்.


