தமிழ் நீ பொன்.சிவகுமாரன், கனடா.
கனடாவில் இயங்கிவந்த ஆவணக்காப்பகம் நகுலசிகாமணியின் முயற்சியால் வல்வெட்டித்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
1969 உடுவில் தமிழரசுக்கட்சி மாநாடு நடந்தது. மேற்படி குரும்பசிட்டி கனகரத்தினத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணக்கண்காட்சி பெருமளவுமக்களினால் விரும்பிப்பார்க் கப்பட்டது. அந்த ஆவணக்கண்காட்சி ஈழத்தமிழர்களின் வாழ்வினைச் சித்தரிக்கும் பத்திரிகைச்செய்திகள் துணுக் குகள் என்பவற்றினூடாக வரலாற்றுப் பார்வையைக் கொண்டிருந்தது. மாநாட்டின் பல் வேறு நிகழ்ச்சிகளினிடையேயான பரபரப்பான நேரங்களிலும் ஒரு இளைஞனின் பார்வையில் பட்ட இந்த ஆவணக்கண்காட்சி அவன் மன தைப் பற்றிக்கொண்டது. ஏன்! எங்கள் ஊரின் செய்திகளையும் இவ்வாறு ஆவணமாக்கினால் என்ன? முடிவு !
அன்றுமுதல் தன் கண்ணில்பட்ட, கைகளிலகப்பட்ட ஊர்ச்செய்திகளையும், தகவல்களையும் சேகரிக்கமுற்பட்டார். இவ்வாறுதேடமுற்பட்டபோது இவரது நண்பர்கள் ச.காந்திதாசன், ந.அனந்த ராஜா என்பவர்களும் கைகொடுக்கவே பயணம் தொடர்ந்தது. இவர்கள்முயற்சியில் “வல்வெட்டித் துறைக் கப்பலின் அமெரிக்கப்பயணம்” என்னும் சிறு கைநூல் உருவானது. இந்நூல் 1974ல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்த பேராளர்களுக்கு வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறை மண்ணின் புகழ்பெற்ற கலாச்சாரத்தை எடுத்தியம்பும் கடலோடிப் பாரம்பரியத்தின் ஒர் அடையாளச்சின்னமாக விளங்கும் புகழ்பெற்ற சுந்தர மேஸ்திரியாரின் “அன்னபூரணி அம்மாள்” என்ற பாய்க்கப்பலின் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறு குறிப்பாகவே அக்கைநூல் அன்று காணப்பட்டது.
அம்மலரின் அடிக்குறிப்பில் இம்மலரின் பொதுக்கட்டுரைகள் யாவும் நண்பர்கள் தயாரிப்பில் உருவானது ‘வல்வைவரலாற்று நூல்’ வல்வையின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய வற்றைத் தாங்கிக்கொண்டு விரைவில் வெளிவரவிருக்கின்றது எனக்குறிப்பிடப்பட் டிருந்தது.
எனினும் நாட்டில் அசாதாரண சூழ்நிலை கருக்கொண்டிருந்த காலம். பொருள்தேடி திரைகடலோடி திரவியம்தேட ஆரம்பித்தகாலம். ஆனாலும் மனதில் அடங்காத வல்வை யின் ஆவணத்தாகம். இவைகளினூடே அவரின் தொடரான பயணம்.
நண்பர்கள் திக்கொன்றாய் திசைமாறிப் பறந்தார்கள். திரைகடலோடித் திரவியம்தேடிய இவரே கடல்கடந்து 1992ல் கனடாவில் குடிபுகுந்தார். புதிய நாடு,வேற்றினமக்கள், ஆனால் வல்வையில் கொண்ட தாகம் தீரவில்லை இடைவெளியற்ற வேலை நேரங்களிலும் இடைவிடாத தேடுதல் இறுதியில் முன்கூறிய ‘வல்வை வரலாறு நூல் 23 வருடங் கள் கடந்து 1997ல் “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” நூலாக கனடாவில் விரிந்துகொண்டது. வல்வை மண்ணின் வரலாறு, பாரம்பரியம், கல்வி, கலை, கலாச்சாரம் என 57 தலையங்கங்களின் கீழ் விரிந்த அம்மலர் வல்வை மண்ணின் பல்சுவைப் பக்கங்களினை ஆவணமாக்கித் தந்ததுடன் நில்லாமல், கனடாவில் ஈழத்தமிழர்களின் கிராமங்கள் நகரங்கள் என்பவற்றின் சிறப்பினைக் கூறும் பின்வந்த நூல்களிற்கு வழிகாட்டியாகவும் உந்துகோலாகவும் மாறியது.
வல்வெட்டித்துறை பற்றிய செய்திகளை சேகரித்து தொகுத்ததன் மூலம் “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” நூல் முதலாம் பதிப்பாக வெளிவந்திருந்தது. தொடர்ந்த தேடுதலில் வல்வெட்டித்துறையின் இலக்கியப் புலமையைப் பறைசாற்றிவரும் புலவரென்ற பெயருக்கேற்றவாறு மறைந்தபின்னும் வல்வை “வயித்தியலிங்கப்புலவர்” எனப் போற்றப்படுபவரின் ‘கந்தரலங்காரம்’ நூலின் பிரதியொன்று கிடைத்தது. ஏற்கனவே 1912ல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தநூல் அதன் ஆசிரியர் மறைந்து 100 வருடங்க ளின்பின் 2001ல் மூன்றாம் பதிப்பாக வெளிவந்தது. இது மேற்படி ஆசிரியரான வயித்தியலிங்கப் புலவரின் புலமைக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது. அத்துடன் வல்வை என்றபெயரை தன்னுடன் இணைத்துக்கொண்டு வழிகாட்டிய புலவர்போன்று ‘கந்தரலங்கார நூலின் புதிய பதிப்பாசிரியரும் வல்வை.ந.நகுலசிகாமணி என தன்னை குறிப் பிட்டுக்கொள்வதும் வழையடி வாழையாக வல்வையின் பின்வளர்ந்து வரும் புலமைக்குச் சான்றாக உள்ளது.
2001ல் வயித்தியலிங்கப்புலவரின் ‘கந்தரலங்காரம்’ உரைநடை வெளியிடப்பட்டநாளில் ‘யாழ்ப்பாண வைபவகௌமுதி’ எனும்நூலும் இரண்டாம்பதிப்பாக மலர்ந்தது. வல்வெட்டித்துறை பற்றிய பல வரலாறுகளைக்கொண்ட இந்நூல் 1918ல் வெளிவந்திருந்தது. யாழ் – வசாவிளான் வேலுப்பிள்ளை(கல்லடி) என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’ எனும் இந்நூல் பெயருக்கேற்றவாறு யாழ்ப்பாணத்தின் பல சரித்திர சம்பவம்களின் பெருமைகளை ஆவணமாக்கிய சான்றாதாரமாகவுள் ளது. வல்வெட்டித்துறை என்ற குடும்பத்தின் பெருமைகளை ஆவணமாக்கிய நகுலசிகாமணி யாழ்ப்பாணச் சமூகத்தின் பெருமைகளை உள்வாங்கி “யாழ்ப்பாண வைபவ கௌமுதி” நூலையும் மீள்பதிப்புச் செய்தார். இதன்மூலம் பலருக்கும் பயன்படும் பனுவலை மீளவும் உயிர்ப்பித்துக்கொண்ட பெருமையைப் பெற்றார். அதுவரை பல வருட காலமாக அவருக்குள்ளே அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆவணம் எனும் நதி பொங்கிப் பிரவாகித்து புதுவேகம் கொண்டு புரண்டோடத் தொடங்கியது. “வல்வெட்டித் துறை ஆவணக்காப்பகம் என்ற பெயரில் அது கொண்டுவந்து தந்தவைகள் வரலாறு, இலக்கியம், சமயம், சமூகம், அரசியல் எனப் பல்வேறுபட்டவையாகும்.
ஏடவிழ்ந்தும் செல்லரித்தும் பழகிப்போன பழந்தமிழரின் பெருமை கூறும் நூல்களையெல்லாம் தேடித்தேடி சேகரித்தும் தொகுத்தும் தந்த புரவலன் ராஜராஜசோழன், புலமை மிகு நம்பியாண் டார்நம்பி போன்று இருவரின் ஓர் உருவமாகத் திகழ்பவர் ந.நகுலசிகாமணி ஆவார். ஆம் அதனால்தான் உ.வே.சாமிநாதையரும், சி.வை. தாமோதரம்பிள்ளையும் முன்வந்த நூற்றாண் டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் இல்லாத நிலையில் மீள்பதிப்புத் துறையில் செய்த அரும்பணிபோல் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனதுபணியை ஆரம்பித்த நகுலசிகாமணி 21ம் நூற்றாண்டில் தனது பணியைத் தொடர்கின்றார். தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை தனிமனிதராக புரியும் இவரின் சாதனை நிகரற்றது. பல்கலைக்கழகங்கள் தமிழகத் திலிருந்து தேடிப்பெற்றுக் கொண்ட பல பழந்தமிழ் நூல்களையே இவர் மீள்பதிப்புச் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள், உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் வாழ்க்கையும் ஆக்கங்களும் என்னும் இரு நூல்களின் ஆசிரியராகவும் மேலும் நூல் களிற்கு புத்துயிர் கொடுத்த பதிப்பாசிரியராகவும் பவனிவரும் இவர் இவ்வாறான பாதையில் புதிய தளத்திலும் காலூன்றலானார். பழைய நூல்களில் வல்வைகளின் செய்தி களை தேடுவதாக ஆரம்பித்த இவரது பயணம் இதற்காக பழைய நூல்களைத் தேடுவதும் சேகரிப்பதுமாக விரிந்தது. இதன் பயனாக காலக்கிரமத்தில் இவரது இல்லம் ஒரு நூல் நிலையமாக மாற்றம் கண்டது. பழம் பனுவலைத் தேடுவோர் நகுலசிகாமணியின் இல்லத்தை நூல்நிலையமாக்கி நாடி வர ஆரம்பித்தனர். கனடாவில் இருப்பவர் மட்டுமன்றி அமெரிக்கா, லண்டன், நியூசிலாந்து, இலங்கை போன்ற இடங்களிலிருந்து வரும் புத்தக ஆர்வலர்கள் மட்டுமன்றி பல்துறை சார்ந்த பேராசிரியர்களும் இவர் வீட்டை நாடினர். இதனால் இவரிடமிருந்த நூல்கள் ஆராய்ச்சிக்கு உதவும் நூல்களாக மாற்றம் கண்டு எதையும் உறுதிபட உரைக்கும் ஆவணங்களாக மாறின. ‘வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்’ என்ற பெயருக்கு இசைந்தாற்போல இவரின் பயணம் தொடர்ந்தது.
நாட்டில்லேற்பட்டிருந்த தற்கால ஓய்வினைப்பயன்படுத்தி 2004ல் குடும்பத்தினருடன் தாயகம்சென்ற இவர் அதுவரைதான் சேர்த்துவைத்திருந்த ஆவணப் பொக்கிஷங்க ளையும் கொண்டுசென்றார். அவைகளை வல்வெட்டித்துறை அ.மி.பாடசாலையில் வல்வையின் பொதுமக்களிற்கு விளங்கும்வகையில் காட்சிப்படுத்தினார். அம்மண்ணில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் அம்மக்களின் உயிரோட்டமாகத் திகழ்ந்த அக்கண்காட்சியில் கருத்துப் பதிவுப் புத்தகமும் இவரால் வைக்கப்பட்டிருந்தது. 1969ல் இவருக் குக்கிடைத்த அந்த மண்ணின் மக்கள் ஒவ்வொருவருக்கும் எங்கிருந்தாலும் இருக்கும். இதற்கு மாற்றுக்கருத்து இல்லை. இதற்கு ஒரு அடையாளமாக அந்த மண்ணின் மைந் தர்களில் ஒருவரின் கருத்து “இக்காட்சியை நிரந்தரமாக்கினால் என்ன?” என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் நிச்சயம் செய்து கொண்டார். வல்வை மண்ணில் கண்காட்சியாக வைக்கப்பட்ட வல்வையின் ஆவணப்பொருட்கள் வல்வெட்டித்துறையிலேயே நிரந்தரமாக பேணப்படவேண்டும். அதற்காக ஒரு காட்சியகம் அங்கேயே உருவாக்கப்பட வேண்டும். பெருமைக்குரிய மண்ணின் வரலாறு, பாரம்பரியம், கலை, கலாச்சாரம் எனத்தேடுவோருக்கு வல்வை மண்ணிலேயே ஒரு வாசம் வேண்டும். உறுதியோடு செயல்படலானார். 40 வருடங்களாக மனதில் ஊறி வளர்த்த கனவு 20 வருடங்களாக கனடாவில் இயங்கிய கனடாவில் இயங்கிவந்த வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம், வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமாக எமது மண்ணில் பாதம் பதித்துள்ளது. வேரோடி மண்ணோடி விழுதூன்றிய ஆவணக்காப்பகம் எமது மண்ணிற்குப் புதுமை சேர்க்கின்றது. சில பல்கலைக்கழகங்களில் காணப்படும் நூல் நிலையம் தவிர்ந்த ஆவணக்காப்பகங்கள் தேசிய ரீதியாகக் காணப்படும் தொல்பொருள் காட்சிசாலைகள் தவிர தனி ஊருக்காக எங்கும் ஆவணக்காட்சியகம் இதுவரை இலங்கையில் எங்கும் அமைக்கப்பட்டதாக வரலாறு ஏதுமில்லை. அமைக் கப்படுமா என்பதும் சந்தேகமே!
ஆவணக்காப்பகம் அமைக்கப்படுவதற்கு சுருங்கக்கூறினால் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு நீண்ட நெடிய பெருமைமிகு வரலாறும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றாதாரங் களும் ஆவணமாகக் காணப்படவேண்டும். சொல்லவே இனிக்கும் சுவை கொண்ட வல்வை என்ற சொல்லிற்கும் வலிமை அதிகம். வல்வெட்டித்துறை இது பட்டினமோ நகரமோ அல்ல சுவை நிர்வாக அலகுக்கானவை. வல்வெட்டித்துறை இது ஒரு குடும்பப் பெயர். இக்குடும்பத்திற்கு இரண்டாயிரம் வருட நீண்ட நெடிய வரலாறு உண்டு. இலங்கைத் திருநாட்டின் வம்சவரலாறு கூறும் மஹாவம்சமும் வல்வெட்டித்துறை வரலாறும் கூறும் ஆவணங்களில் ஒன்று சோழரின் வரலாறு கூறும் பட்டினப்பாலையும் வல்வையின் மகிமை கூறும் ஆவணங்களில் இன்னொன்று. இவைபோல் ஆயிரமாயிரம் வரலாறுகள் எம்மிடம் உண்டு. அவைகளின் நிகழ்கால தரிசனமாக இவ் “வல்வெட்டித்துறை ஆவணக்காப்பகம்” எதிர்காலத்தில்திகழும். வல்வெட்டித்துறை என்றவினிய குடும்பத்திலேற்றபடும் குத்துவிளக்கான வல்வெட்டித்துறை ஆவணக்காப் பகத்தை ஏற்றிடும் ந.நகுலசிகாமணி, உமா நகுலசிகாமணி தம்பதியினருக்கு நெஞ்சார நன்றிகள் கூறும் வல்வை மக்களுடன் மக்களாக.
நன்றி.


