வல்வை. ந.நகுலசிகாமணி.
நெடியகாடு திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோயில்
19ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் பிள்ளையார், வயிரவர் என்று அழைக்கப்பட்ட ஒரு சைவ ஆசாரசீலர் தற்போதய கோயில் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த மட த்தில் பிள்ளை யாரை எழுந்தருளச் செய்த சிலகாலத்திற்குள் வேதாரணியத்திலிருந்து கணபதி ஐயர் என்ற பெய ருடைய ஒரு சைவக்குருக்களை அழைத்து வந்து பூஜைகள் செய் வித்தார் எனத்தெரியவருகி றது அவர்காலத்தின் பின்பு அவருடைய மகன் சிவஶ்ரீ தியாகர் ஐயர் அவர்களால் நடத்தப்பட்டுவந்தன.
அக்காலங்களில் கப்பல் வாணபம் தொடங்கப்பட்டு செவ்வனே நடந்து வந்ததால் தொழில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமிருந்தும் மகமைகள் வசூலிக்கப்பட்ட கோயிலுக்குச் சேர்க் கப்பட்டு வந்தன. 01 -02 -1846ல் பிரசித்த நொத்தாரிசு கே.கணபதிப்பிள்ளை முன்னிலையில் எழுதுப்பட்ட உறுதியாலும் மகமைத் தொகையில் என்ன விழுக்காடு நெடிய காடு பிள்ளையார் கோயிலுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்ற விபரம் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இவ்வுறுதிகள் ஊரிலுள்ள பல பெரியார்கள் முடித்துக் கொடுத்தி ருக்கிறார்கள். மகமைகள் வசூலிப்பதும் செலவுசெய்வதும் பெரியார் திருமேனியார் வெங்கடாசலபிள்ளை உட்பட ஐவர்கொண்ட குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிள்ளை யார் கோயிலுக்கு ஆறுமுகம் முருகுப்பிள்ளை என்னும் பெரியார் மணியமாக இருந்தார்.
1867மாண்டு சிவன்கோயில் சங்குத்தாபனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளில் வெங்கடாசலம்பிள்ளை சிவன்கோயிலோடு ஒன்றிவிட்டமையால் அவர் பிறகோயில் வேலை களிலிருந்து விலகிவிட கந்தக்குட்டியார் என்னும் ஆசாரசீலர் பிள்ளையார் கோயில் மேற்பார்வையாளரானார். இவர் பிள்ளையாரை முடிந்தவரை ஆகமவிதிப்படி அமைந்த கோயிலில் எழுந்தருளச்செய்ய வேண்டுமென உறுதி பூண்டார். சிறிது சிறிதாக மூலஸ்தானம், தம்பமண்டபம், மதில் முதலியவை கட்டிப் பிள்ளையாரை மூலஸ்தானத்தில் எழு ந்தருளச் செய்து 1884ல் பிரதிட்டாபிஷேகம் செய்வித்தார்கள். இவருக்கு ஆண்பிள்ளைகள் இல்லாமையால் தன் சகோதரி மகளின் கணவர் சண்முகம்பிள்ளையை தன்னுடைய திருப்பணி வேலைகளில் சேர்த்துக்கொண்டார். கொடித்தம்பம் நிறுத்தித் தேரும் செய்வித்து 1892 -1912ம் ஆண்டுகளுக்கிடையில் வருடாந்த பெருந்திருவுிழாவையும் தொடக்கி வைத்தார்கள்.
இவர்கள் 1912 ஆண்டளவில் கந்தக்குட்டியார் கதிரிப்பிள்ளை நடராசா அவர்கள் தம்பமண்டபத்தையும் கோபுரத்தோடு ஒட்டிய மண்டபத்தையும் கட்டிமுடித்தார்கள். திருச்சிற் றம்பலப்பிள்ளையார் ஊஞ்சல் பராக்குப் பாக்களைக் கொண்ட ஒரு சிறு நூலையும் 1916ம் ஆண்டு மதுரையில் பதிப்பித்தார்கள். 1918ம் ஆண்டில் கோயில் பரிபாலனம் இவரது தமயனார் க.க.அருளம்பலம் அவர்களிடம் சேர்ந்தது. 1933ம் ஆண்டுகளில் செல்லையா தில்லையம்பலமும் ஆறுமுகம் விசுவலிங்கமும் ஒருவர்பின் ஒருவராக கோயிலை பரிபா லித்து வந்தார்கள். 1933 – 1937ம் ஆண்டுகளில் ம.சாம்பசிவம் மணியமானார். இவர் காலத்தில் சுற்றுமதில் வேலைநடந்தது. அவர் விலகிக்கொள்ள பொ.தங்கவேலாயுதம் மணிய மானார். இவர்காத்தில் கோபுரத்தின் கீழ்ப்பகுதி திரு.கார்த்திகேசு (ஓவசியர்) பெண் சகுந்தலையம்மாவாலும் கட்டி முடிக்கப்பட்டது.
19ம் ஆண்டு திரு.நா.செல்வமாணிக்கம் அவர்கள் மணியமாகி பல வேலைத் திட்டங்களைச் செய்தார். வள்ளி தெய்வானை முருகக்கடவுளுக்கும் புதியகோயில் கட்டப்பட்டது. நாகதம்பிரான் விமான வேலையும் முடிக்கப்பட்டது. இராஜகோபுர வேலைகளும் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் 07 -06 -1970ல் சிறப்புற நடந்தேறியது. அதைச் சிறப்பிக்க திரு முருக கிருபானந்தவாரியார் வந்து பிரசங்கம் செய்தார்.
கோயிலின் முக்கிய திருப்பணிகள் செயதவர்கள்
1. கர்ப்பக்கிரகம் – ஆ.செல்லத்துரையும் பெண் தங்கரத்தினமும்.
2. திருச்சபை – வ.வ.இராமசாமிப்பிள்ளையும் பிள்ளைகளும்.
3. திருத்தமண்டபம் – வ.வ.இராமசாமிப்பிள்ளையும் பெண் இராசம்மாளும். நா.இராசமாணிக்கமும் பெண் வள்ளிநாயகியும்.
4. நாகதம்பிரான் – க.பொன்னம்பலமும் பெண் அன்னப்பிள்ளையும்.
5. 1970ல் புதிதாகக் கட்டப்பட்ட முருகையா – அ.துரைராசாவும் பெண் இராஜேஸ்வரியும், அ.சிற்றம்பலமும் பெண் பார்வதியும்.
6. யாகசாலை – டீ.சாம்பசிவமும் பிள்ளைகளும்.
7. வைரவர் – சரவணப்பெருமாள்.
8. வசந்தமண்டபம் – வே.இராமவேலுப்பிள்ளையும் பெண் ராசரெத்தினமும்
9. பூந்தோட்டக்கிணறு, தண்ணீர்த்தொட்டி – சோ.காஞ்சிமாவடிவேலும் பெண் சௌந்தரியும்.
10. மணிக்கூட்டு – க.வயிரமுத்து, நாகபூஷணியம்மாள்.
11. தீர்த்தக்கிணறு – அ.மாரிமுத்துவும் நாகம்மாளும்.
12. மடப்பள்ளி – மு.ம.பாலசிங்கம்
13. பூங்காவன மண்டபம் – செ.வி.நடராசா, சி.பரம்சோதி, ஐ.காத்தாமுத்து.
14. 1974ல் கட்டப்பட்ட மோர்மடம் – தியாகராசா, தேவசிகாமணி.
15. இராஜகோபுரம் மேல்பாகம் – சே.கந்தசாமி (கட்டிஅப்பா) அவர்களும் வல்வை மக்களும்.
16. பஞ்சமுகப்பிள்ளையார் – 1979ல் பூ.க.முத்துக்குமாரசாமி.
17. தேர்முட்டி – அ.சி.விஷ்ணுசுந்தரம்.
18. வெளிக்கிணறு – தா.சண்முகதாஸ்.
19. கிழக்கு வீதி மடமும் அதன்நிலமும் – ஓவசியர் க.பொன்னம்பலம்.
20. நவக்கிரகம் – சவுதிஅரேபியாவில் தொழில் புரிந்த வல்வை இளைஞர்கள்.
21. வன்னிவிநாயகர் – ச.சண்முகம்பிள்ளை ஞ◌ானமூர்த்தி.
22. இராஜகோபுரம் அடிப்பாகம் – ச.கார்த்திகேசுவும் பெண் சகுந்தலைஅம்மாவும்.
23. பெரியபிள்ளையார் – ஆ.செல்லத்துரைத் தண்டயல்.
24. ஆறுமுகசாமி உற்சவமூர்த்தி – வ.சிவஞ◌ானவேல்.
25. மஹாவிஷ்ணு – பொ.பாலசுந்தரம்.
26. வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் – பொ.தங்கவேலாயுதம்.
27. ஆறுமுகசாமி ஆலயம் – குணசுந்தரம் செல்லப்பாக்கியம் பிள்ளைகள்.
முப்பது வருடங்களுகுப்பின் 7 – 7 -2000ம் ஆண்டு சோ.சுப்ரமணியம் (தலைவர்) கா.றன்ஜனதாஸ் (செயலாளர்) ஆகியோரின்கீழ் இயங்கிய பரிபாலனசபையாரின் காலத்தில் கும்பாபிஷேகம் இனிது சிறப்பாக நடைபெற்றது.


