1896ம் ஆண்டில் கு.சிதம்பரப்பிள்ளை அவர்கள் ஆலடியில் வைத்தீஸ்வரன் கோயிலுக்குரிய காணியில் தொடங்கிய ஆங்கிலப் பாடசாலை சிதம்பராக் கல்லூரி என்ற பெயரில் ஊரிக்காட்டிற்கு மாற்றப்பட்ட பொழுது அதே இடத்தில் ஞ.தையல்பாகர் அவர்களால் “சிவகுருவித்தியாசாலை” என்ற பெயருடன் தமிழ்ப் பாடசாலை தொடங்கப்பட்டது. 1926ம் ஆண்டு வரை ஆரம்பப் பாடசாலையாக இயங்கி வந்த பாடசாலை ஆறாம் வகுப்புக்குமேல் கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்புவரை கற்பிக்கும் பாடசாலையாகவும் தற் போது இயங்கி வருகின்றது.
ஆலடியில் நடைபெற்ற பாடசாலை சில வருடங்களுக்குப்பின் இடம் போதாமை காரணமாக தற்போதிருக்கும் இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது.1961ம் ஆண்டு வீசிய புயலால் பாடசாலைக் கட்டிடம் சேதமுற்றபின்னர் அவற்றை ஓட்டுக்கூரையாக மாற்றினார்கள். இவ்வித்தி யாசாலை கடற்கரையோரமாக நல்ல சூழலில் இயங்கிவருகின்றது. வல்வைப் பெரியோர்களின தும், ஆசிரியர்களினதும் முயற்சியால் நன்குவளர்ந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பாடசாலையாகத் திகழ்கிறது. 1978ம் ஆண்டு இரண்டுமாடிக் கட்டிடம் கட்ட எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராஜலிங்கம் அவர்கள் வேண்டிய பணம் அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
புற்றளையைச் சேர்ந்த சின்னையா உபாத்தியார் என்பவர் இப்பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியராவார். இவரைத் தொடர்ந்து T.K.அருணாசலம், வீரகத்தி, வல்விட்டி க.வல்லிபுரம், அல்வாய் வ.ஆறுமுகம் ஆகியோர் தலைமை ஆசிரியர்களாக இருந்து நடாத்தி வந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து 1922ல் கெருடாவிலைச் சேர்ந்த திரு.சி .கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று 1956ல் இளைப்பாறியதைத் தொடர்ந்து திரு.இ.துரைராசா 1956 முதல் 1969வரை கடமையாற்றினார். அவ ரின்பின் கெருடாவிலைச் சேர்ந்த திரு.சி.அழகதுரை கடமையேற்றார். இவரது காலத்தில் 5ம் வகுப்புகளுக்கு மேல் நடைபெறத் துவங்கியது. இவரின்பின் திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் பதவியேற்றார். இவரின் காலத்திலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.


