இராசையா மகேஸ்வரன்
சிரேட துணைநூலகர், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை (B.A(Hons), MLIS)
உலகில் சகல நாடுகளிலும் ஆவணக்காப்பகங்கள் உண்டு. ஆவணக்காப்பகங்கள் என்பது குறிப்பேடுகளை, வெளியீடுகளை தொகுத்து வைத்து பாதுகாக் கும் இடமாகும். இன்றைய ஆவணங்களை வருங்காலத்தவர்களுக்கு பாதுகாத்து வழங்குவது இதன் பணிகளுள் முக்கியமானதாகும். இலங்கையில் ஆவணப்பாது காப்புக்கு நீண்டகால வரலாறு உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் மன்னர் காலந் தொட்டு இலங்கையின் பௌத்தமடாலயங்களிலும், கோயில்களிலும், நூல்கள் பாது காக்கப்பட்டும், பயிலப்பட்டும் வந்துள்ளன. மகா விகாரைகள், அபயகிரி விகாரை ஆகியன ஆவணப்பாதுகாப்பு நிலையங்களாக விளங்கியிருந்தன. இலங்கையில் 3ம் நூற்றாண்டுமுதல் ஆவணப்பாதுகாப்பு ஆரம்பிக்கப்பட்டபோதும் ஐரோப்பிய ஆட்சிக் காலத்திலேயே 16ம் நூற்றாண்டில் ஆவணப்படுத்துதல், நூலகம் என்பன முறைப் படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பண்டைக்காலத்தில் மன்னர்களால் வழங்கப்பட்டவை குறித்துவைத்த ஆவ ணம் “பின்பொத்”(Pinpoth) என அழைக்கப்பட்டது. இதனை வைத்துக்காத்தவர் “பொத் வருன்”(Poth Varun) நூல்காப்பாளர் என அழைக்கப்பட்டுள்ளனர். கோட்டை இராச்சியகாலத்தில் (1415–1597) மன்னரால் வழங்கப்பட்ட வாய்மூல தண்டனை களைக் குறிவைத்த “முகவெட்டி” (Mukavetti) என்ற ஆவணம் பயன் படுத்தப் பட்டதாகவும், கண்டி இராச்சிய காலத்தில் ஆவணங்களை மகாமோட்டி (Maha Moutti) பாதுகாத்ததாக வரலாறுகளில் காணப்படுகின்றன. இக்காலத்தில் மன்னர் கள் கொடையாக வழங்கிய காணிகளுக்கான ஓலைச்சீட்டு (olai Sittu; ‘Cul Put’) என அழைக்கப்பட்டதுடன் இவ்வாவணங்களை எழுதுபவரும், பாதுகாப்பவரும் “எழு துனர்” (liannah) எனவும் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றில் காணப்படுகின்றது. அநுராதபுரத்தில் (300–1017) மன்னரது இரச்சியநிதிக்கணக்குகள் “பண்டக பொத் தகம்” (Pandaka–Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற் றினை கூறும் மகாவம்சம், சூளவம்சம் என்பன தீபவம்சம் (Dipawamsa, Attakatha) என்னும் 4ம்-6ம் நூற்றாண்டு ஆவண ஏடுகளைத் துணைக்கொண்டு எழுதப்பட் டுள்ளன.
போர்த்துக்கேயரே (1515–1656) ஆவணப்படுத்துதலை 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்துள்ளனர். ஒல்லாந்தர் (1640–1796) போர்த்துக்கேயரிடமிருந்து கொழும்பை 1656இல் கைப்பற்றியபோது ஆவணப்படுத்தப்பட்ட ஆவணங்களைக் கையளிக்க மறுத்து போர்த்துக்கேயர்கள் அழித்துள்ளனர். ஒல்லாந்தர் 1660–1662காலப்பகுதி யில் ஆவணப்படுத்துனர் (Record Keeper – Mr.Pieter de Bitter) நியமிக்கப்பட்டுள் ளார். இக்காலத்தில் பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காலி, யாழ்ப்பா ணம், திருகோணமலை, கொழும்பு என ஆவணப்படுத்துதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர்களிடமிருந்து பிரித்தானியர் (1796 – 1947) இலங்கையை கைப்பற்றிய போது 1798இல் ஒல்லாந்தரினால் (டச்சுக்காரர்) ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 1815இல் கண்டிஇராச்சியம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டபோது கண்டி ஆவ ணங்கள், அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிர்த்தானியர் ஆட்சிக்காலத்தில் மாவட்டக்காரியாலயங்களில் ஆவணக்காப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1870களில் நூலகங்களும், 1877ல் நூதனசாலை யும் நூலகமும் (Museum and Library) ஆரம்பிக்கப்பட்ட பின் உள்@ர் வெளியீடு கள் சேர்க்கப்பட்டுள்ளன. அச்சகம் மற்றும் வெளியீட்டாளர்சட்டம் 1885ல் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை 19ம் நூற்றாண்டிலே நூல்கள் ஆவணப்படுத்தலை ஆரம் பித்துள்ளது. 1902ம் ஆண்டு ஆவணக்காப்பாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு கொழும்புக் கச்சேரியில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 1902ம் ஆண்டு ஆவணப்படுத்தலில் ஒரு திருப்புமுனையாக ஆவணப்படுத்தல் மீண்டும் மாவட்டமட் டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி, யாழ்ப்பாணம், காலி, கொழும்பு ஆகிய இடங்களில் நூதனசாலைகள் (Museum) ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1942-1943 காலப் பகுதியில் 2ம் உலக யுத்தகாலத்தில் ஜப்பான் கொழும்பில் குண்டு போட்டதால், ஆவணக்காப்பகம் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே வேளை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் (1876- 1947) காலனித்துவ நாடுகளின் வெளியீடுகள் காலனித்துவப் பதிப்புரிமைச்சட்டத்தின்கீழ் (Colonail copy right Act) சேர்க்கப்பட்டு பிரித்தானிய நூதனசாலையில் ஆவணப்படுத்தப்பட்டது.
1796 இலிருந்து 1948 வரையிலான காலப்பகுதி வெளியீடுகள், ஆவணங் கள் பிரித்தானியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1947 இலங்கை சுதந்திரம் பெற்றபின், சிலகாலம் கல்வியமைச்சின் கீழ் ஆவணக்காப்பகம் காணப்பட்டுள்ளது. 1951இல் அச்சக பதிப்புச்சட்டம் (“Printing press ordinance” – 1951 -20ம் சட்டம்) கொண்டுவரப்பட்டுள்ளது. 1952இல் இலங்கை தேசிய நூல்விபரப் பட்டியலுக்கான உபஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்ட பின், கல்வி அமைச்சிலிருந்து ஆவணக் காப்பகம் உள்@ராட்சி மற்றும் கலாசாரஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 1962இல் முதலாவது தேசியநூற்பட்டியல் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தே வெளியிடப் பட்டதுடன், இதன் வெளியீட்டுக்கு பிரித்தானிய தேசியநூல்விபரப்பட்டி யலின் பிரதம ஆசிரியர் திரு.ஏ.ஜெ.வேல்ஜ்ஜின் சேவையும் பெறப்பட்டுள்ளது. 1963 தொடக்கம் வித்தயலங்கார பல்கலைக்கழகத்தில் ஆவணங்கள் ஆவணப்படுத்தப் பட்டு 1975இல் ஆவணக்காப்பகம் புதியக்கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன
இத்தேசியநூற்பட்டியல் சட்டவைப்பு நூற்சேர்க்கையின் அடிப்படையில் தயா ரிக்கப்படுகின்றது. 1962 தொடக்கம் 1974ஆம் ஆண்டு வரையிலான தேசியநூற்பட் டியல் தேசியசுவடிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு 48ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் இத்திணைக்களம் தேசிய ஆவணக்காப் பகம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் நோக்கம், 1974ஆம் ஆண்டு 48ஆம் இலக்கச்சட்டத்திலும், 1981ஆம் ஆண்டு 30ஆவது இலக்கச் சட்டத்திலும் குறிப் பிடப்பட்டுள்ளது. 1885ஆம் ஆண்டின் அச்சகம் வெளியீட்டு பதிவுச்சட்டத்திற்கு அமைவாக, அச்சகங்களும் வெளியீட்டாளர்களும் சகல நூல்களினதும் பிரதிகள் ஐந்தினை வழங்கவேண்டும். இன்னுமோர்பிரதி 1952இலிருந்து பேராதனைப் பல்க லைக்கழக நூலகத்திலும், ஒரு பிரதி சுவடிகள் திணைக்களத்திலும் சட்டச் சேர்க் கையாக (Legal depository) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
1951 அச்சக வெளியிட்டாளர்கள் சட்டத்தின் பின், 1973இல், 45வது சட்ட மாக தேசியச்சுவடிகள் சட்டம்(The National Archives Low No 48, 1973) கொண்டு வரப்பட்டது. 1973இல், 51வது சரத்துக் கேற்ப இலங்கை தேசியநூலக சேவைகள் சபை (வுhந ளுசi டுயமெய யேவழையெட டுiடிசயசல ளநசஎiஉந டீழயசன) ஸ்தாபிப் கப்பட்டபின், இலங்கையில் வெளியிடப்படும் சகல வெளியீடுகளும் சட்டப்படி இச்சபைமூலம் ஆவணப் படுத்தப்பட்டுவருகின்றன. 1976இல் இலங்கை தேசிய நூலகசேவைகள் (The Sri Lanka National Library service Board) உருவாக்கப் பட்டதுடன் 1990ஆம் ஆண்டில் இலங்கை தேசிய நூலகம் (The Sri Lanka National Library) ஆரம்பிக்கப்பட்டது. 1986ம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேச தராதரநூல் எண் (ISBNN) வழங்கும்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் சர்வதேச தராதர நூல்எண் (ISBN) பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலங்கை தேசிய நூற்பட்டியலில் (National Bibliography) பதியப்படுகின்றது. இலங்கையைச் சேர்ந்தவர்கள் சர்வதேச தராதர நூல்எண் வேறு நாடுகளில் பெற்றுக் கொண்டால் இலங்கையரது நூலாயினும் இலங்கை தேசியப்பட்டியலில் பதியப்படுவதில்லை.
இலங்கை உள்நாட்டுயுத்தம் நடைபெற்றகாலத்தில் “தமிழ்” பிரதேசத்தின் வெளியீடுகள், ஆவணங்கள் தமிழ் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை 2009இல் நடைபெற்ற யுத்தத்தினால் அழிந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. இதேபோல் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி கனகரத்தினம் என்னும் தனிநபரால் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ் ஆவணங்கள் பற்றிய தகவல் களையும் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஆய்வின் பிரச்சினைகள்
இலங்கையில் தமிழ் ஆவணங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்படுவ தில்லை. தமிழ் நூல்கள் பல இந்தியாவிலும் பிறநாடுகளிலும் அச்சிட்டு வெளியி டப்படுவதும், இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேச தராதர நூல் எண் பெறப்படாமையும் எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களின் அக்கறையின்மையும் போதிய தமிழ் உத்தியோகத்தர்களின்மையும், பாராமுகத்தன்மையும் காரணமாக இலங்கைத் தேசிய நூற்பட்டியலில் தமிழ்நூல்கள் பதியப்பட்டு ஆவணப்படுத்தப் படாதுள்ளன. இதனால் ஆய்வாளர்கள், எதிர்காலச் சந்ததியினர் இவை பற்றி அறி யமுடியாதுள்ளனர்.
ஆய்வு முறை
வரலாற்றுத் துணையுடன் இலக்கிய வரலாற்று ஆய்வு நூல்களின் ஆதாரங் களுடன் இத்துறைசார்ந்த இரண்டாம் நிலை சான்றுகளுடன் களநிலையில் நேரடி அவதானிப்புகளுடனும், விளக்கநிலை வாயிலாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட் டது. “நூல் தேட்டம்” என்ற நூல்பட்டியல் ஆவணம் முதலாம் தொகுதி முதல் ஐந்தாம் தொகுதிவரை அவதானிக்கப்பட்டது. வெளியீட்டாளர்களின் விலைப்பட்டி யல்கள், நூல்களிலகங்களில் வைப்பிலுள்ள நூல்கள், வகுப்பாக்கப்பட்டியல்கள் ஆகியன அவதானிக்கப்பட்டன. இவற்றுள் அநேகமான நூல்கள் நூல்தேட்டத்தில் பதியப்பட்டுள்ளதால், நூல்தேட்டப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டே கணிப் பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் துண்டுப்பிரசுரங்கள், பாடசாலை பாட நூல்கள், பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்ட நூல்கள், வினாவிடைகள் வர்த்தமானி வெளியீடுகள், அரசதிணைக்கள அறிக்கைகள் ஆகியன தவிர்க்கப் பட்டுள்ளது.
ஆய்வின் நோக்கம்
இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதல் பூரணமாக நடைபெற வில்லை என வெளிக்காட்டல், இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்து தலில் உள்ள இடர்பாடுகளை கண்டறிதலும், இவற்றினைகளையும் வழிமுறை களை கண்டறிதலும் தீர்வுகாண்பதுமே இவ் ஆய்வினது நோக்கமாகும்.
ஆய்வின் போது கண்டறிந்தவையும் அவதானிப்புகளும்
“சுவடிகளின் ஆற்றுப்படை” என்ற நான்குதொகுதிகளாக எஸ்.ஏச்.எம்.ஜெமீல் இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்களது நூல்களை ஆவணப்படுத்தியுள்ளார். ச.ஜோ. செல்வராஜா மட்டக்களப்பு மாவட்ட நூலியல் தொடர்பான வரலாற்றினை ஆவணப்படுத்தியுள்ளார். க.குணராசா (செங்கை ஆழியான்) இலங்கை நாவல்கள் பற்றியும், கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் மற்றும் பேராசிரியர் பூலோகசிங்கம் ஆரம்பகால வெளியீடுகள் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ளனர். இதே போல் புகலிட மண்ணிலே நூல்களின் பதிவுகளை ஒன்று திரட்டியும் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களினது பதிவுகளையும் ஒன்று திரட்டியும் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களினது பதிவுகளையும் “நூல் தேட்டம்” என்ற நூல்தொகுதி யாக இலண்டனில் உள்ள நூலகர் என்.செல்வராஜா வெளியிட்டுள்ளார். ஆயிரம் நூல்களுக்கு ஒரு தொகுதி என்ற வகையில் ஆறு (6) நூல் தேட்டங்கள் வெளி யிட்டுள்ளதுடன் மலேசிய, சிங்கப்பூர் வாழ் தமிழர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் ஒரு தேட்டமாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இலங்கைத் தமிழ் நூல் களை பதிந்து வெளிக்கொணர்தலில் ஈடுபட்டுள்ளார்.
ஆய்வுக்காக உதாரணமாக, 2005ஆம் ஆண்டினை நோக்குவோமாயின், “நூல்தேட்டம்” என்ற நூலின் பதியப்பட்டுள்ள தமிழ் நூல்களினை எடுத்துக்கொண் டால், தொகுதி ஒன்று – ஆறு வரை மட்டும் 2005ஆம் ஆண்டில் 361 இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பதியப்பட்டு காணப்படுகின்றன. இந்நூல்களில் இலங்கையில் 197 நூல்களும், சென்னையில் 99 நூல்களும், இங்கிலாந்தில் 24 நூல்களும், கனடாவில் 13 நூல்களும், ஜேர்மனியில் 08 நூல்களும், பாரிஸில் 07 நூல்களும், அவுஸ்திரேலியாவில் 05 நூல்களும், நோர்வேயில் 03 நூல்களும், டென்மார்க்கில் ஒரு நூலும் வெளியிடப்பட்டதாக பதியப்பட்டுள்ளன. இது 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களின் பதிவின் இறுதி முடிவல்ல. பின்தொடரும் ஏனைய தொகுதிகளிலும் 2005ஆம் ஆண்டு வெளியீடுகள் பதிப்படவுள்ளன. ஆனால் இலங்கைத் தேசியநூல்பட்டியலில் (National Bibliography) 91 இலங் கைத்தமிழ் நூல்கள் மட்டுமே அக்காலப்பகுதியில் பதியப்பட்டுள்ளன. 270 இலங் கைத் தமிழ்நூல்கள் பதியப்படாது காணப்படுகின்றன. எனவே இலங்கைத் தேசிய நூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியலில் 72 இலங்கை நூலாசிரியர்களின் நூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளமையைக் காணக்கூடி யதாகவுள்ளது. ஆனால் இலங்கை தேசியநூல்பட்டியலில் மணிமேகலைப் பிரசுரத் தின் ஒரே ஒரு நூல் மாத்திரமே பதியப்பட்டுள்ளது. இது இலங்கை தேசியநூற் பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மேலும் புகலிட மண்ணிலே இலங்கைத்தமிழர்களின் நூல்களை ஒன்று திரட்டியும், இலங்கையிலே ஒன்றுதிரட்டியும் ஈழத்தமிழர் தேசியநூல்களின் ஆவணப் படுத்தலினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பணியை மேற்கொள்ளும் அமைப்புகளாவன:
1. ஐரோப்பிய தமிழ்ஆவணக்காப்பகமும் ஆய்வகமும்(European Tamil Documentation and Research centre- ETDRC)இ லண்டன்.
2. உலகத் தமிழ் நூலகம், ஸ்கார்பரோ, ஒன்றாரியோ, கனடா
3. வல்வை (ந.நகுலசிகாமணி) ஆவணக் காப்பகம், கனடா.
4. முல்லை அமுதன் ஆவணக்காப்பகம், லண்டன்.
5. தமிழ்தகவல் மையம் – ஆவணக்காப்பகம், (Tamil Information Centre TIC Library), லண்டன்.
6. மலையக ஆவணக்காப்பகம் – புசல்லாவ (இந்திய வம்சாவளி இலங்கையரது ஆவணங்கள்)
7. பிரித்தானிய நூலகம் (British Library)
8. இலண்டன் பல்கலைக்கழக நூலகம் – SOAS – School of Oriental and African Studies Library, (University of London).
தமிழ் நூல்களின், வெளியீடுகளின் ஆவணப்படுத்துதலில் காணப்படும் பிரச்சினைகள்
1. இலங்கையில் ஆவணப்படுத்துதலில் தொடர்ச்சியின்மை:
2. இலங்கை தவிர்ந்த பிறநாடுகளில் தமிழ் நூல்கள் வெளியிடுதல்:
2.1.1 நூல்களை வெளியிடுவோர், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், குறைந்த செலவு மற்றும் சந்தை வாய்ப்பு போன்ற பொருளாதாரக் காரணங்களி னால் பல இலங்கைத் தமிழ் நூல்களை தமிழ்நாட்டில் வெளியிடுகின்றனர். இவ் வாறு சென்னையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு பதிவுகள் எதுவும் இலங்கை யில் இல்லை. இவற்றுக்கு சர்வதேச தராதர எண் பெறப்படுவதும் இல்லை. எனவே இவை இந்தியாவிலும் பதிவுசெய்யப்படுவது இல்லை.
2.1.2 1983 – 85ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் அரசியல்காரணங்களுக்காக பல நூல்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டு இலங்கை தவர்ந்த பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இவை இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரசுரங்களாகும். இவ்வெளியீடுகளின் பதிவுகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லை.
2.1.3 தமிழகத்தில் சென்னையில்வெளியிடுவதற்கான காரணங்களில் பிரதான மானது, சென்னையில் வெளியீட்டாளர்களின் மூலம் வெளியிடப்படும் நூல்களை தமிழகஅரசு கொள்வனவு செய்வதே. எனவே எழுத்தாளர்கள் இந்தியாவில் வெளி யிட ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வெளியீடு செய்யும்போது தமிழகஅரசுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் இரண்டாம் பதிப்புகூட “இரண்டாம் பதிப்பு” என குறிப்பிடப்படாது வெளியிடப்படுகின்றன.
2.1.4 ஈழத்து எழுத்தாளர்கள் தமது நூல்களில் முதல் பதிப்பினை இலங் கையில் வெளியிட்டு வரையறுக்கப்பட்ட விநியோகம் காரணமாக மீண்டும் தமிழகத் தில் மீள்பதிப்புச் செய்து இந்தியவாசகர்களுக்காக வெளியிடுகின்றனர். மாநில மொழி அல்லாத நூல்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இருந்த போதும், தமிழ்மொழி என்பதால் இலங்கை நூல்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லை.
2.1.5 இந்தியாவில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேச தராதர எண் (ISBN)பெறப்படாமைக்கு வெளியீட்டாளர்கள், அச்சகங்கள் “தீர்வை அல்லது வரி” யிலிருந்து விலக்குப்பெற்று தப்புவதற்காக எனக்கருதலாம்.
2.2 புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள்
2.2.1 1786இல் மலேசியாவின் பினாங்கு தீவினை கைப்பற்றியபின் ஆங்கிலே யரால் வரவழைக்கப்பட்டு பின் அங்கு குடியேறிய இலங்கைத் தமிழர்களதும், 1950 களுக்கு முன் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழில் நிமித்தம் குடி யேறிய இலங்கைத்தமிழர்களதும் வெளியீடுகள் எங்கும் பதியப்படவில்லை. மலே சியா வாழ் யாழ்ப்பாணத் தமிழர்கள் “இலங்கைத்தமிழர்” என்ற வரையறைக்குள்ளும் அடக்கப்படவில்லை.
2.2.2 உள்நாட்டு தமிழ்ஈழ யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க், சுவிற்சலாந்து, கனடா, கென்யா, அவுஸ்திரேலியா, ஐக்கியஅமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படாது ஆவணப்படுத்தப்படாதும் காணப்படுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள் அந்த அந்த நாடுகளில் தேசியநூற் பட்டியலில் இடம்பெறுவதும் இல்லை. ஆவணப்படுத்தப்பட்டிருப்பில்ஃசட்டவைப்பில் வைக்கப்படுவதுமில்லை.
3. இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படாமை
3.1 இலங்கையில் வெளியிடப்படும் நூல்களில் சர்வதேசதராதர எண் பெறப் படாதவை தேசிய நூற்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாதது போல் அச்சகம், வெளியீட்டாளர் சட்டப்படி கையளிக்கப்படாத தமிழ் நூல்களைத் “தேடிப்பெறல்” இடம்பெறுவதுமில்லை.
3.2 இலங்கையில் கலாசார அமைச்சின் மூலம் சாகித்திய விருது வழங்கப் பட்ட நூல்கள் சிலவற்றின் பதிவுகளும் தேசிய நூற்பட்டியலில் காணப்படவில்லை. முன்னர் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு மட்டும் சாகித்திய விருது வழங்கப்பட்டது. தற்போது பல சிறந்த எழுத்தாளர்கள் இலங்கையில் வெளியிடு வது செலவுஅதிகம் என்ற காரணத்தினால் இந்தியாவில் அச்சிடுகின்றனர். அவற்றுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் இவை ஆவணப்படுத்தப்பட வில்லை. தேசிய நூற்பட்டியலிலும் இல்லை. அதனால் சட்டவைப்பிலும் இல்லை.
4 உள்நாட்டு யுத்தமும் அதன் தாக்கமும்:
4.1 இலங்கையில் யுத்தசூழல் காரணமாக புலம்பெயர்ந்தோர் தம்நூல்களை இலங்கையில் வெளியிடுவதற்கு பயங்கொள்ளுகின்றனர். ஈழமக்கள் விடுதலை தொடர்பான தகவல்கள் இருப்பின் இலங்கையில் வெளியீட்டாளர்கள் பல விசார ணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால் பல நூல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. தற்போது இந்தியாவிலும் வெளியிடுவது சிக்கலாகியுள்ளதால் ஐரோப்பாவில் வெளியீட்டு முயற்சிகள் சிறப்புப்பெற்றுள்ளன. ஆனால் இவை இலங் கையில் தேசியநூல்பட்டியலில் சேர்ப்பதற்கு எவ்வித பிரயத்தனமும் எடுக்கபபட வில்லை.
4.2 ஈழம் என்ற வார்த்தைப்பிரயோகமும் இலங்கையில் நூல்களை அச்சிட்டு வெளியிட பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளமை மற்றொரு காரணமாகும். வடகிழக்குத் தமிழ் எழுத்தாளர்கள் தமது விடுதலைப்பிரச்சினைகள் தொடர்பான இலக்கியநூல்களை இலங்கையில் வெளியிடாமல் வெளிநாடுகளிலேயே வெளியிட் டனர். இந்தப் பதிப்புத்தளமாக இந்தியாவே அமைந்தது.
4.3 யுத்தசூழலில் இலங்கை வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் ஈழத்தமிழ ரின் நூல்களை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் எழுத்தாளர்களை அணுகவும் இல்லை. இச்சந்தர்ப்பத்தினை இந்திய வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் பயன்படுத்திக்கொண்டார்கள்.
எழுத்தாளர்கள், வெளியீட்டாளரின் புறக்கணிப்பும் திணைக்களத்தின் புறக் கணிப்பும், தேசிய சுவடிகள் திணைக்களத்துக்கு தமிழ் நூல்கள் கிடைக்காமை, இலங்கைச்சுவடிகள் திணைக்களத்திலும், தேசியநூலகத்திலும் தமிழில் வேலைசெய்யக்கூடிய தேவையான ஆட்பலமின்மை என்பன நூற்பட்டியல்தயாரிப்பில் பின் தங்கியநிலை ஏற்பட ஒரு காரணமா கின்றது. இதனால் எதிர்காலசந்ததியினரின் ஆய்வுகளுக்குத் தேவையானபதிவுகள் குறைவடைந்துள்ளமை மாத்திரமல்லாது ஆவணப்படுத்துதல் இல்லாதுபோயுள்ளமை பெரும்குறைபாடு.
தீர்வும் முடிவுரையும்
இலங்கையில் நூற்பதிவு இலக்கத்துடன் வெளியீட்டாளர் வெளியிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இலங்கைத் தமிழ்நூல்கள் வெளியிடுவோரை “நூல்பதிவு” இலக்கம் பெறவேண்டும் எனக் கட்டாயப்படுத்த வேண்டும். நூல் வெளியீட்டாளரும் நூல் பதிவுஇலக்கம் பெற ஆர்வம் காட்டவேண்டும். நூல்பதிவு இலக்கம் பெறாமல் வெளியிடுவோர் தமது நூல்களை வெளியிடுவதை இலங்கைத் தமிழ் எழுத்தாளர் கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
வெளியீடுகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு தேசியநூல் பட்டியலில் பதிவு செய்ய வழிகோல வேண்டும். இதற்காக அரசாங்கத் தினை வலியுறுத்த வேண்டும்.
தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும். பாராமுகப்போக்கு தவிர்க்கப்படவேண்டும்.
இலங்கையிலும் பிறநாடுகளிலும் சட்டப்படி நூல்பதிவுஎண் பெறாத நூல் களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் நூற்பதிவினை ஊக்குவிக்க வேண்டும்.
அரச சார்பற்ற நிறுவனமாக எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் ஒன்றிணைந்து ஒரு ஆவணக்காப்பகத்தினை தமிழ்நூல் ஆவணப்படுத்தலினை மேற்கொள்ள ஆவன செய்யவேண்டும்.
புகலிட நாடொன்றில் முழுமையான ஆவணக்காப்பகம் ஒன்றினை நிறுவுதல் வேண்டும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத் திற்கு (ETDRC) எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் நூல்களை வழங்கவேண்டும்.
சுவடிகள் திணைக்களம், தேசியநூலகம் ஆகியன தமிழ்நூல்களை தேடிப் பெறவேண்டும். மற்றும் சர்வதேச தராதரஎண் பெறாத நூல்களையும் தேசிய நூல் பட்டியலில் சேர்த்து பதியப்படவேண்டும். மேலும் புலம்பெயர்ந்தவர்களின் நூல்க ளையும் தேடிப்பெறல் வேண்டும். சுயதணிக்கைக்குட்படாது இலங்கையைச் சேர்ந்த, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் நூல்களை சுவடிகள்திணைக்களம், தேசியநூலகம் ஆகியவற்றுக்கு வழங்கவேண்டும்.
தமிழ் சாகித்தியபரிசு மற்றும்விருதுகள் வழங்கும்போது நூல்பதிவு இலக்கம் பெற்ற நூல்களை மட்டும் மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்கவேண்டும்.
உசாத்துணை நூல்கள்
* கனக.செந்திநாதன், “ஈழத்து இலக்கிய வளர்ச்சி கொழும்பு, அரசு வெளியீடு, (1964)
* செல்வராஜா.என், “மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் -தொகுதி -1, ஐக்கியஇராச்சியம்
* அயோத்தி நூலகசேவைகள், 2007.
* செல்வராஜா.என், “நூல்தேட்டம் -தொகுதி -1-5”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள், 2002 -2008.
* செல்வராஜா.என், “வேரோடி விழுதெறிந்து”, கொழும்பு, ஞானம் பதிப்பகம், 2009
* நடராசா.எப்.எக்ஸ்.சி, “ஈழத்து தமிழ்நூல் வரலாறு” கொழும்பு, அரசு வெளியீடு, 1970.
* பூலேகசிங்கம்.பொ., “தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழர் பெருமுயற்சிகள்”, கொழும்பு, “குமரன் இல்லம்”, 1970.
* மகாலட்சுமி,.தி., நிர்மலா.சூ, பூமிநாதன்.த., “சுவடிச்சுடர்”இ சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2002.
* ஜேமீல்.எஸ்.எச்.எம், “சுவடிஆற்றுப்படை”இ கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணி யகம், 1994
* Maheswaran.R., (2007) “Bibilometric Study of Tamil Publications in Sri Lanka in 2005”, Colombo, University Librarian Association of Sri Lanka. National Library of Sri Lanka: Colombo; Sri Lanka National Library Service Board, 1995.
* Wimalaratne.K,D,G,. “An Introduction to the National Archives in Sri Lanka” Colombo,
* Social Science Research Centre, National Science Council of Sri Lanka,1978.
நன்றி :-
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் தமிழ்ப்பிரிவுப் பணியாளராகப் பணியாற்றும் திரு.இ.மகேஸ்வரனால் எழுதப்பட்ட மேற்படிக் கட்டுரையில் இலங்கையிலும் புகலிட மண்ணிலும் ஆவணப்படுத்தலினை மேற்கொண்டு வரும் அமைப்புகளில் எமது வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும் ஒன்றாகக் கருதப்பட்டு எழுதப்பட்டதற்காக பேராசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுவதோடு, தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் தமிழ்நாடு கோவை நகரில் 2010ல் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த செம்மொழி மாநாட்டில் நாமும் பங்குபற்றியிருந்தவேளை இக்கட்டுரை வாசிக்கப்பட்டது எமது பணிக்கு மேலும் உற்சாகம் அளித்தது.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் அணிந்துரையுடன் எம்மால் எழுதி வெளி யிடப்பட்ட ‘உடுப்பிட்டிசி சிவசம்புப் புலவர் வரலாறும் அவரது ஆக்கங்களும்” என்ற நூலை அங்கு சிறப்புவிருந்தினராக வருகை தந்த அவரிடம் முதற் பிரதியை வழங்கியதும் எமது நீங்காத நினைவு


