வல்வை வைத்தீஸ்வரன் கோயில்

வல்வை. ந.நகுலசிகாமணி.
யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை என்னும் பேரூரின் புகழை ஓங்கச் செய்து மிளிர்ந்து கொண் டிருப்பது அங்கு அமைந்துள்ள சிவன்கோயிலாகும். கோயில்களுடன் தன் பெயரைப்பிணைத்து புகழெய்தியவர் திருமேனியாரின் மகனான பெரியதம்பியாரெனும் காரணப்பெயர்பெற்ற வெங்க டாசலம்பிள்ளை என்பவராவார். பெரியதம்பியதம்பியார் சித்திரபானு ஆண்டு மார்கழித் திங்கள் 6ம் நாள் (19 -12 -1822) வல்வையம்பதியில் பிறந்தார்.

இவர் தந்தையார் வேலாயுதர் திருமேனியார் வல்வைத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்கு தர்மகர்த்தாவாக இருந்து அதனை வேறு சில பெரியார்களிடம் ஒப்படைத்து வல்வை முத்துமாரி அம்மன் கோயிலுக்கு தர்மகர்த்தாவாக இருந்த புண்ணிய மணியகாரருக்கு அடுத்தபடியாக அக்கோயிலுக்கு தர்மகர்த்தாவாகினார். திருமேனியார் சிவபத மெய்தவே இவரது தமயன் மகனான சங்கரியார் தர்மகர்த்தாவாகினார்.

அம்மன் கோயில் நடாத்திவரும் காலத்தில் திருமேனியார் தனது மகன் கனவிற் தோன்றி சிவனுக்கு கோயிலெடுக்கும்படி பணித்தார்.பெரியதம்பியார் இரவு பகல் இதே நினை வாயிருந்தார். பெரியதம்பியார் தமக்குப் பரம்பரையாக வந்த தோட்டங்கள் திருத்திப் பயிரிட்டும் புதிய பல காணிகளையும் வாங்கியும் செல்வத்தைப் பெருக்கினார். பன்னி ரண்டு கப்பல்கள் அமைத்து கடல் வணிகஞ் செய்து வணிகப்பிரபு ஆகினார். முதன்முதலாக பெரியவர் அம்மன் கோயிலுக்குத் தெற்கே உள்ள 60 பரப்புக் காணியை வாங்கினார். இக்காணிகள் கற்களாகவும் கரடு முரடாகவும் செடிகொடிகள் நிறைந்ததாகவும் இருந்தது. பெரியவர் அம்மன் கோயிலுக்குக் தென்கிழக்கே உள்ள மடத்தில் இருந்து கொண்டு காணியை துப்பரவு செய்து அருள்மிகு வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமானுக்கு கோயில் கட்டுவதற்காக 1867ம் ஆண்டு அத்திவாரம் இடுதலாகிய சங்கத் தாபனத்தைச் செய்வித்தார். இந்தியாவிலிருந்து வந்து கோயில் வேலைகளை கவின் பெறச் செய்தனர்.

இவ்வாலயத்து லிங்கம் “பாணலிங்கம்” இந்த லிங்கத்தை காசிக்குச் சென்று கங்கையாற் றிலிருந்து கொண்டு வந்து கொடுத்து உதவியவர் விஸ்வநாதர் என்பவரே. இவ்வாலய த்து ஸ்தூபி, தங்கக்கலசம், நடராஜர் முதலியவற்றை வார்ப்பித்துக் கொடுத்து உதவி பல வழி களிலும் துணைபுரிந்தவர் விசுவநாதரின் குமாரர் சரவணமுத்து என்பவரே.

கோயில் கட்டத்தொடங்கிய காலமாகிய 1867ம் ஆண்டு தொடக்கம் 1900மாம் ஆண்டுவரை கோயில் எசமானர்களுக்கும் கோயில் கட்டுவதற்கும் பூசாக்கிரமங்களுக்கும் வேண்டிய அறிவுரைகளையும் சரீர உதவியையும் இப்புண்ணிய காலத்திற்கு வல்வைப் பெரியாராகிய இயற்றமிழ்ப்போதகாசிரியர் சங்கரப்பிள்ளை வயித்தியலிங்கப்பிள்ளை அளித்துவந்துள்ளார்கள். இவ்வாறு கோயில் கட்டிடங்கள் ஒருவாறு உருவாக்கப் பட்டபின்பு சுபானுவருடம் வைகாசிமாதம் (8 -6 -1883) பிரதிட்டாகும்பாபிஷேகம் பிரமஶ்ரீ.நா.குமா ரசாமிக் குருக்கள் அவர்களால் மிகச்சிறப்பாக நடந்தேறியது. கோயில் தொடங்கப்பட்டதிலிருந்து ஆறுகாலப் பூசைகளும் நடைபெறலாயின. முதன்முதலில் புலோலி பிரமஶ்ரீ. சண்முகக் குருக்கள் எனும்பிராமணர் பூசகராயிருந்துவந்தார். பிரதிட்டா கும்பாபிஷேகம் நடந்தபின்னும் பெரியவர் எசமானாகப் பத்துவருடங்கள் காரியங்களைப் பரிபாலித்து வந்தார்.

பெரியவருக்குப்பின் அவருடைய தம்பியார் குழந்தைவேற்பிள்ளை எசமானாகி 1892 -1905வரை பரிபாலித்து வந்தார்கள். இவருடைய காலத்தில் வட்டுக்கோட்டைச் சித்தங் கேணி கா.வயித்தியலிங்கம்பிள்ளை அவர்களால் வசந்தமண்டபத்தை கருங்கற்களால் சமைப்பித்தார். இவர்தம்பியார் ராமசாமிப்பிள்ளை 1905 -1912வரை கோயில்மேற்பார்வை யாளரானார். இவர் காலத்திலும் திருப்பணிவேலைகள் தொடர்ந்து நடைபெறலாயின.

திருமேனியார் குழந்தைவேற்பிள்ளை தமது பணத்தில் கொழும்பு நகரத்தில் முன்பு செக்கடித்தெரு என்று அழைக்கப்பட்டதும் தற்போது கதிரேசன்வீதி என்று அழைக்கப்படு கின்ற வீதியில் கதிரேசன் கோயிலைத் தோற்றுவித்தார். 1970ம் 1983ம் ஆண்டு இரு கும்பாபிஷேகமலர்களிலும் 1918ல் வெளிவந்த க.வேலுப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வைபவ கௌமுதியிலும் இதுபற்றிய விபரம் உள்ளது. இன்றும் அதன் வருடாந்த உற்சவத்தின் 7ம் திருவிழா வல்வைவாசிகளால் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

வல்வை சிவன்கோயிலில் இராமசாமிப்பிள்ளைக்குப் பின்பு பெரியவரின் மகன் திருமேனிப்பிள்ளை 1912 -1921 எசமானாயிருந்தார். இவர் காலத்திலும் திருப்பணிகள் குறை வின்றி நடந்தன. கடல் கடந்த கப்பல் வாணிபத்தில் தொடர்பு கொண்டவரான இந்திய தெலுங்குதேச வாசியான காரஞ்சேடு ஏர்லர்கட்டர் அரங்கநாயுடுகாரு என்னும் பிரபு முன் மண்டபத்தையும், ராஜகோபுரத்தின் அடிப்பாகத்தையும் தோற்றுவித்தார்கள். வல்வைப் பிரபுவாகிய விசுவநாதர் சரவணமுத்து, நடராஜர் மண்டபத்தையும் இயற்றுவித்தது மட் டுமன்றி கோயில் பெருவீதிக்கு, தமக்கு சொந்தமான ஒரு பகுதி நிலத்தையும் கொடுத்துதவினார். கம்பர்மலை வள்ளல் வல்லியப்பர் வேலுப்பிள்ளையும் பெண் பாறுவதிப்பிள் ளையும் சில முக்கிய திருப்பணிகளைச் செய்தனர். கோப்பாய் பிரமஶ்ரீ கார்த்திகேசுக்குருக்கள் கோயிலின் பிரதம பூசகரானார். அவரது பரம்பரையினராகிய பிரமஶ்ரீ பரமேஸ் வரக்குருக்கள் 1954ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு இறைவனடி சேரும்வரை ஆசாரியராயிருந்து கோயிலின் பூசைக்காரியங்களைப் பக்திசிரத்தையோடு நடாத்திவந்தார். அவரின் மூத்தமகன் மனோகரக் குருக்கள் இப்போது பூசை நடாத்திவருகிறார். அவரது பிள்ளைகள் அவருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

1919ம் ஆண்டு அமிர்தானந்த சுவாமிகள் என்னும் அந்தணப்பெருமகன் வல்வைக்கு வந்து இவ்வூரிலும் அயலூர்களிலும் உள்ள பெரியவர்களின் பொருளுதவியோடு இரண்டா வது கும்பாபிஷேகத்தைச் சிறப்புற நிகழ்த்தினார். வல்வை திரு.ச.செல்வவிநாயகம், திரு.ஆ.வேலுப்பிள்ளை முதலிய பெருமக்களும் இக்கும்பாபிஷேகத்திற்கு உறுதுணையாக இருந்து பேருதவி புரிந்தார்கள்.

1921ல் அருணாசலத்தின் மூத்தமகன் திரு.வெங்கடாசலம் சில ஆண்டுகள் எசமானக இருந்து தன் தம்பியாகிய அரு.சபாரத்தினம் அவர்களிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படை த்தார். இவர் தனது தமையனாரின் அனுசரணையுடன் கோயிலை 1921 -1956 வரையில் திறம்பட நிர்வாகித்தார். இக்காலத்தில் நிகழ்ந்த முக்கிய திருப்பணிகள் இராஜகோபுரம் மேற்குப் பகுதியை வல்வைப் பெரியார் திரு.சி.செல்லத்துரைப்பிள்ளை (அம்மான்) பெண் வள்ளியம்மாளும் தேவிவாசல் மண்டபத்தை ஆசிரியர் வே.வ.சிவப்பிரகாசம் அவர்க ளும், மணிக்கூட்டுக் கோபுரத்தை ச.துரைராசா அவர்களும், வசந்தமண்டபப் பூச்சு வேலையை வல்வை சி.குமாரசாமி அவர்களும் நிறைவேற்றி முடித்தார்கள். கோயிலின் மேற் கேயுள்ள மடத்தையும் அதனோடு சேர்ந்தவைகளை நா.வேலுப்பிள்ளை என்ற கெச்சுத் தண்டயல் அவர்களும், மற்றும் பெரியமடம் அரு.தெட்சணாமூர்த்திச் செட்டியார் அவர் களாலும், சிறிய மடம் சி.சந்திரசேகரம் அவர்களாலும் அன்னதானமடம் பொ.தங்கவேலாயுதம் அவர்களாலும் நிறுவப்பட்டது. கோயிலின் கும்பாபிஷேகம் நடத்த காலம் தாழ்த் தியதால் அப்போதைய எசமானும் வல்வை சி.விஷ்ணுசுந்தரம், திரு.அ.துரைராசா, திரு.ச.ஞானமூர்த்தி ஜே.பி, இணைச்செயலாளர் உட்பட பல சிவநேயப் பிரபுக்களும் கூடித் திருப்பணிக்கு உரிய ஆயத்தங்களைச் செய்து 25 -4 -1966ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து ராஜகோபுரத்திற்குத் தேவையான பூச்சு வர்ணங்கள் எடுக்கப் பட்டு வேலைகள் திறம்பட நடந்தது புனராவர்த்தன சம்புரோட்சண கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலின் பெருந்தெருவை இணைக்கும் “சிவபுரவீதி” திறக்கப்பட்டது. அத ற்கு அதை அண்டிய மக்கள் தங்கள் நிலத்தை அன்பு உபகாரம் செய்தார்கள். வசந்தமண்டப வாசலுக்கு தெற்கே உள்ள பகுதியையும் அம்மன் வாசலையும் இணைத்து இரண் டாம் வீதியை வி.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.சண்முகம் இருவரும் நல்லமுறையில் மூடிக்கட்டிய திருப்பணியை 1970ம் ஆண்டு நிறைவேற்றினார்கள்.

வல்வெட்டிப் பெருமக்கள் சிவனுக்கு அழகுறச் சித்திரத்தேர் செய்வித்தார்கள் அவர்கள்தான் தேர்த்திருவிழாவை (வருடாவருடம்) யாழ்குடாநாட்டின், தென் இந்தியாவின் பிரபல நாதஸ்வர இன்னிசை விற்பன்னர்களுடன் நடத்துகிறார்கள். பெரியார் எஸ்.வைரமுத்து எம்பெருமானுக்கு வெள்ளி இடபவாகனம் சிறந்த முறையில் அமைத்துள்ளார். திரு.கார் வண்ணசாமி ஐம்பொன்னாலான மஹாவிஷ்ணு விக்கரகத்தையும், திரு.கே.இரத்தினசிங்கம் அவர்கள் சரஸ்வதியையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆதிகோயிலடி திருமதி. நடராஜர்.வள்ளியம்மாள் 12ம் திருவிழாவிற்கான திருக்கல்யாண மண்டபத்தைக் கட்டுவித்தார். தற்போது இரத்தினசாமி.சபாரத்தினம் எசமான் நிர்வாகத்தில் போரினாலும். காலத்தாலும் ஆலுய கும்பாபிஷேகம் நடைபெற்று 35 வருடங்கள் ஆகிவிட்டன என்பதாலும் 7 -05 -2003ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. சிவனருளால் வெளிநாடுகளில் வாழும் வல்வை மக்களும், ஊர் மக்களும் தமது பங்கைச் செலுத்தி கோயில் முழுவதும் சரிவரப் புனரமைக்கப்பட்டது. முக்கியமாக இரு தெப்பக்குளங்கள், சுற்றிவர மதில்களில் நந்தி அமைக்கப்பட்டு அழிவுற்ற மடங்களும் திருத்தியமைக்கப்பட்டு ஆலய பிரதமகுருக்களுக்கு புதிதாக வதிவிடமும் அமைக்கப்பட்டது.

மனநிறைவோடு சுபானு வருடம் 21ம் நாள் (4 -02 -2004) புதன்கிழமை ஶ்ரீவைத்தீஸ்வரப் பெருமானுக்கும் அருட் சக்தியாம் அன்னை ஶ்ரீபாலாம்பிகாதேவிக்கும். மஹாகும்பாபி ஷேகம் நடைபெற்றது. மஹாகும்பாஷேக மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கோயிலில் நடைபெறும் பூசைக்கிரமம்:

1. உஷத்காலம் (அதிகாலை 5.45)
2. காலசந்தி (காலைப் பூஜை 9.30)
3. மத்தியாணிகம் (மத்தியானப்பூஜை 11.45)
4. சாயரட்சை (மாலை முதுற்காலம் 6.00)
5. சாயரட்சை (இரண்டாம் காலம் 7.30)
6. அர்த்தசாமம் (மாலை 8.30)

கோயில் குருபரம்பரை

முதலாவது கும்பாபிஷேகம் 1883ம் ஆண்டு சுபானுவருடம் வைகாசி 27ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது, இதனை அக்காலத்தில் பிரசித்திபெற்ற குமாரசாமிக் குருக்கள் நடாத்திவைத்தார். அன்றுதொடக்கம் பருத்தித்துறையைச் சேர்ந்த திரு,சண்முகக்குருக்கள் பூசைகளை நடாத்திவந்தார்கள்.

1908ம் ஆண்டு தொடக்கம் நீர்வேலியில் ஜனனமும் கோப்பாயில் வாசம் செய்தவரும் ஆரியதிராவிட மொழியில் திறமையுடையவரும் கிரியா விற்பன்னரும் குருலட்சணமும் நிறைந்தவருமான கார்த்திகேசுக் குருக்களவர்கள் அவர்கள் அக்கால எசமான் அவர்களால் நியமிக்கப்பட்டார். இவர் 24 ஆண்டுகள் பூசைகள் உற்சவங்கள் முதலியவற்றைச் செய்து வந்தார். இவருடைய காலத்தில் 1919ம் ஆண்டு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில இவருடைய சிறியதந்தையார் இராமலிங்கக் குருக்கள் (மாப்பிள்ளைக் குருக்கள்) இவருடைய விருப்பப்படி பிரதான ஆசாரியராக இருந்து கும்பாபிஷேகம் செய்தார்.

அதன்மேல் இவருடைய மகன் திருநீலகண்டக் குருக்கள் (சின்னப்பாக் குருக்கள்) இவருடன் கூட இருந்து பூசைகளை நடாத்திவந்தார்கள். 1930இல் கார்த்திகேசுக்குருக்கள் இறைவனடி சேர்ந்தார். அதன்பின் நீலகண்டக்குருக்களே பிரதான ஆசாரியாக இருந்து பூசைக்கருமங்களை நடாத்தி வந்தார். இவருடன் இவரது மகன் பரமேஸ்வரக்குருக்கள் 1942ம் ஆண்டிலிருந்து உதவியாக இருந்து வந்தார்.1954ம் ஆண்டு நீலகண்டக்குருக்கள் இறைவனடி சேர்ந்தார். அன்று தொடக்கம் பரமேஸ்வரரே பிரதான ஆசாரியாக இருந்து 1985ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். தற்போது அவரது மூத்தமகன் மனோகரக் குருக்கள் நடாத்தி வருகின்றார்.

கொழும்பு மயூரபதி ஶ்ரீபத்திரகாளி அம்மன் கும்பாபிஷேகமலர் 2000,
நன்றி இ.வல்லிபுரம் (சமாதான நீதவான்),

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top