ஆழிக்குமரன் ஆனந்தன்.

திரு.ஆனந்தன் அவர்கள் திரு.விவேகானந்தன் இராசரெத்தினம் தம்பதியினருக்கு சிரேஷ்ட புதுல்வனாக 1943ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி தீருவிலில் உள்ள அவர்கள் வீட்டில் பிறந்தார். அவர் சிறுவயதில் சிவகுரு வித்தியாசாலையிலும் சிதம்பராக்கல்லூரியி, ஹாட்லிக்கல்லூரியில் கற்று கல்விப் பொதுத்தராதர உயர்வகுப்புப் படித்து சித்தி பெற்று பல் கலைக்கழகத்தில் சட்டப் படிப்பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயின்று வழக்கறிஞரானார். ஈழத்திற்கு வல்வைக்கு சர்வ தேசரீதியில் புகழ்தேடித்தந்த வீரனாவார். வீரகேசரி சிறப்பிதழ்கள் வெளியிட்டு “ஆழிக்குமரன்” என்னும் பட்டத்தைச் சூட்டியது. இவர் வல்வைப் சிவன்கோயில் இராஜகோபுரத்தைக் கட்டிப்பெரிய திருப்பணியைச் செய்த பெரியார் திரு.சி.செல்லத்துரைப்பிள்ளை அவர்களின் பேரனாவார். ஆனந்தன் அவர்கள் ஈட்டிய கின்னஸ் சாதனைகள் ஒரே பார்வையில்……

1) 1963 மார்ச் 3ம் திகதி பாக்குநீரிணையை நீந்தியது. அப்போது வயது 18.

2) 187 மணிநேரம் இடைவிடாது 1487 மைல்கள் சைக்கில் ஓட்டி 1979ம் ஆண்டு உலகசாதனையை கொழும்பில் நிலைநாட்டினார்.

3) கொழும்பில் 136மணிநேரம்போல் பஞ்சிங் உலகசாதனை 1979ம் ஆண்டு நிகழ்த்தினார்.

4) இரு நிமிடத்தில் 165 தடவைகள் இருந்து எழும்பி சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

5) 33 மணிநேரம் ஒற்றைக்காலில் நின்று உலக சாதனையை கொழும்பில் 1980ல் நிகழ்த்தினார்.

6) High Hicks என்ற சாதனையை 9100 தடவைகள் கொழும்பில் நிகழ்த்தினார்.

7) சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ந்து 80 மணிநேரம் தவளைபோல் வாழ்ந்து தமிழக மண்ணிலும் 1981ம் ஆண்டு ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும் மக்கள் இதயங்களில் இடம்பெற்றுள்ள சாதனைகள் சில.

1) 1978 டிசம்பரில் டுவிஸ்ட் நடனம் 128 மணிநேரம்.

2) 70 இறாத்தல் எடையுள்ள 2000 பொருளை தடவை கீழேயிருந்து மேலே தூக்கியது.

3) சென்னை அண்ணா நீச்சல்தடாகசாதனையின்பின் மற்றொரு சாதனைக்குமுயன்று சென்னை வீதி களில் 149 மணிநேரம் தொடர்ந்துநடந்த இவர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

4) யாழ்மண்ணில் 22 -01 -1983ல் 22அவுன்ஸ் பிலியட் தடியை 2520 தடவைகள் உயர்த்தி மயிர்கூச்செறியும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

5) 130 இறாத்தல் நிறையுள்ள இரும்பைத் தோளில் காவிக்கொண்டு ஒற்றைக் காலில் நின்ற சாதனை.

ஆனந்தனுக்கு வல்வையில் விளையாட்டுக் கழகங்கள் பின்பு அவர் படித்த பாடசாலைகள் அதனைத் தொடர்ந்து நாடுபூராகவும் வரவேற்பளித்தும் பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனர். யாழ் முஸ்லீம்கள் பிரம்மாண்டமான ஊர்வலத்தையும் ஜின்னா மைதானத்தில் பெரும் வரவேற்புக்கூட்டத்தையும் அளித்து கௌரவித்தனர்.

ஆழியில் காவியம் படைத்தவன் !

ஆழியில் கதை முடித்தவன் !

ஆழிக்குமரன் என்று அழைபெயர் பெற்றவன் !

அருஞ்செயல் முடித்துப் பெரும்புகழ் உற்றவன் !

ஆழிக்கரை அமை வல்வையின் வித்தவன் !

அன்னை எம் தமிழிற்கு அணி செய் முத்தவன் !

ஆழிசூழ் அகிலம் தனை அறிந்திட வைத்தவன் !

அழியாப் புகழையும் அந்த ஆழியில் பெற்றவன் !

ஆழியில் தனது இனிய ஆவியும் விட்டவன் !

அழிவு கடந்து ஆனந்தன் நிலை பெற்றவன் !

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top