வல்வை மகளிர் மகாவித்ததியாலயம்.

வல்வையிலேயே நான்கு பாடசாலைகள் இருந்தாலும் பெண்பிள்ளைகளுக்கு தனியாக ஒரு பாடசாலை இருக்கவேண்டும் என்று சில பெரியார்கள் விரும்பினார்கள். நெடிய காட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்கும் இடுகாட்டுக்கும் இடையில் உள்ள துரை வாத்தியாருக்குச் சொந்தமான காணியை பட்டினசபை விலைக்கு வாங்கியிருந் தது. அதில் நகரசபைக்குச் சொந்தமாக நிர்வாகக் கட்டிடம் கட்ட மக்கள் அனுமதி கேட்க அம்மன் வீதியில் நகரசபைத் தலைவர் திரு.மு.இரத்தினவடிவேல் தலைமையில் கூட்டம் கூடியபோது ஒரு சாரார் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்டது.

வல்வை மக்களினதும் தனது விருப்பத்தையும் நிறைவேற்றும் பொருட்டு திரு.க.துரைரத்தினம் பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி காணியை கல்வி இலாகாவிற்கு மாற்றி அதற்குத் தெற்குத் திசையில் ஒரு மண்டபத்தை அரச செலவில் கட்ட உதவிபுரிந்தும், அதற்குச் சமாந்திரமாக வடக்குத் திசையில் ஒரு கட்டிடத்தை திரு.செல்லத்துரைத் தண்ட யல் அவர்களின் புதல்வர்கள் திரு.செ. யோககுரு, திரு.செ.மௌனகுரு இருவரும்சேர்ந்து தமது தாயார் நினைவாகக்கட்டி அன்பளிப்புச் செய்தார்கள். அதன் திறப்பு விழா 1972ம் ஆண்டு தை மாதம் வெகுசிறப்பாக நடந்தேறியது. வல்வையைச் சேர்ந்த திருமதி.கோ.அரியரத்தினம் (B.A) முதல் தலைமை ஆசிரியை ஆகவும் 334 பிள்ளைகளையும் மூன்று தொண்டர் ஆசிரியர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் இப்பாடசாலை அதிக வளர்ச்சியடைந்து, திருமதி.அரியரத்தினம் மாற்றம் பெற்றுச்செல்ல உடுப்பிட்டியைச்சேர்ந்த திருமதி.எம்.இராஜரத்தினம் சில ஆண்டுகள் பணியாற் றினார். தற்போது கு.நகுலாம்பிகை கடமையாற்றுகின்றார். வல்வை வர்த்தகர் களான திரு.சி. விஷ்ணுசுந்தரம், திரு.அ.துரைராசா, திரு.ஐ.காத்தாமுத்து, திரு.ம.மா.பாலசிங்கம், திரு.ரங்கவடி வேல் முதலானவர்கள் பாடசாலையின் நாற்சுற்று மதில்க ளையும் முந்திய இரு கட்டிடங்களையும் இணைக்கும் மாடிக்கட்டிடங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தார்கள். இப்பாடசாலையின் வளர்ச்சியில் நெடியகாட்டு இளைஞர்க ளின் பங்களிப்பு அதிகமானது. தற்போது வெளிநாட்டில் வாழும் பழைய மாணவர்களின் உதவியோடு விளையாட்டு மைதானத்தையும் அமைத்துள்ளனர். இதன் அதிபராக திருமதி நித்தனசுந்தரமும் அவருக்குப்பின் தற்போது திருமதி.கு.நகுலாம்பிகை அவர்களும் கடமைபுரிகின்றனர். உலகவங்கியின் உதவியுடன் நூலகமொன்றும் கணினி வகுப்ப றையும் கட்டப்பட்டன. லண்டன்வாழ் வல்வை மக்கள் 10 கணினிகளும் திரு.யோகச்சந்திரபோஸ் அவர்களினால் “பாண்ட்” வாத்தியக் கருவிகளும் வழங்கப்பட்டன.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top