தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்.

1851ம் ஆண்டளவில் அமெரிக்கமிஷன் பாதிரிமார் இவ்வூரில் 5ம் வகுப்பு வரையுள்ள பாட சாலையை ஆரம்பித்தார்கள். இவ்வூரில் சைவசமயத்தவர்களேவசித்துவரும் காலத்தில் இப்பாட சாலை தொடங்கியதும் இங்கே கல்வி கற்கும் மாணவர்களை கிறீஸ்தவ சமயத்தில் சேர்ப்பதற்காக பாதிரிமார் சனி, ஞயிறுகளில் வீடுதோறும் சென்று தங்கள் சமயத்தைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது இவ்வூரில் பலகப்பல்களை வைத்துவியாபாரம் செய்துவந்தவருமாகிய திரு.வீர கத்திப்பிள்ளை அவ்வூர்ப்பெரியவர்களுடன் யோசித்து தனதுசகோதரன் இல் லத்தில் 1912ம் ஆண்டு 20 மாணவர்களுடன் ஆரம்பித்தார். இதன் அதிபர்களாக 1919ல் திரு.எம்.கார்த்திகேசு அவர்களும் 1932ல் அ.சரவணமுத்து அவர்களும் பின்னர் சீர்காழில் இருந்து எஸ்.பி.கிருஸ்ணமூர்த்தி ஐயர் B.A அவர்களும் கடமைபுரிந்தனர். இப்பாடசாலையில் ஆங்கிலம் கற்கத்தொடங்கிய காலத்தில் மலேசியாவில் உத்தியோகம் பார்க்கும் ஊரவர்கள் லீவு பெற்று வரும்வேளையில் ஆங்கிலம் கற்பித்து பரிசில்களும் வழங்கினர்.

திரு.வீரகத்திப்பிள்ளை அவர்கள் 1933ம் ஆண்டில் காலம்சென்றாலும் வீரகத்திப்பிள்ளை அன்ட் சன்ஸ் என்ற ஸ்தாபனத்தில் தமக்கிருந்த மூன்றிலொருபங்கை பாடசாலை அபிவிருத்திக்கு செலவிடஎழுதியிருந்தார். 1965ம் ஆண்டு அமெரிக்கமிஷன் பாடசாலையையும் ஆங்கிலப்பாடசா லையும் ஒன்றாகவிணைக்கப்பட்டது. 1965ல் திரு.இராசேந்திர மும் 1968ல் திரு.கே.தம்பிப்பிள்ளை யும், 1976ல் திரு.எஸ்.சத்தியமூர்த்தியும் அதிபர்களாக இருந்தனர். திரு.செ.சின்னரெத்தினம், திரு .செ.யோகச்சந்திரன் ஆகியோரும் அதிபர்க ளாகப் பணியாற்றினர். திருமதி.காந்திமதி.கணப திப்பிள்ளை மனையியல்கூடத்தையும், திரு.வீ.இராசசேகரம் வின்ஞனகூடத்தையும், திரு.நடேசன் மரவேலைக்கூடத்தையும், இப்பாடசாலையின் பழையமாணவனும் பாராளுமன்ற உறுப்பினரு மான திரு.க.துரைரத்தினம் தனதுமுயற்சியால் பாடசாலைக்கு இருமாடிக்கட்டிடத்தையும் உருவாக்கி னார்கள்.

21-1-81ல் அதிபராக கே.ஜெயராசா தலைமையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்கள் முன்னிலையில் வீரகத்திப்பிள்ளை மகாவித்தியா லயம் எனப்பெயர் சூட்டும்விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top