வல்வை ஆவணக்காப்பகத்தில் இடம்பெற்ற ஆறாம் ஆண்டு நிகழ்வும், நூல் அறிமுக விழாவும்

ந.நகுலசிகாமணி, உமா.நகுலசிகாமணி.
வல்வை ஆவணக்காப்பகத்தில் இடம்பெற்ற ஆறாம் ஆண்டு நிறைவு நிகழ்வும் நூல் அறிமுகமும். (May 2nd, 2018ல் இடம்பெற்றது)

இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் தலைமையில் “இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்”, “நீங்காத நினைவுகள்” என்ற நூல்கள் ஆவணக் காப்பகத்தில் அறிமுகம் நடைபெற்றது. முத்துமாரியம்மன் கோயில் பிரதமகுரு தண்டபாணிகதேசிகர் வரவேற்று ஆசியுரையும் நிகழ்த்தினார். அலை ஒளி ஆசிரியர் திரு.சக்திவடிவேல் தமிழர் வரலாற்று சுவடுகள் நூலையும், திரு.நகுலசிகாமணி தனது சரிதவியலோடு இணைந்த நீங்காத நினைவுகள் என்னும் நூலையும் அறிமுகம் செய்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், யாழ். மாவட்ட மேயர் ஆர்னோல்ட், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், புதிய சுதந்திரன் பத்திரிகை நிர்வாக இயக்குனர் அகிலன் முத்துக் குமாரசாமி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்நூல் அறிமுக விழாவில் ”இலங்கைத்தமிழரின் வரலாற்று சுவடுகள்”, ”நினைவில் நிறைந்தவை” எனும் இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

மாவை சேனாதிராஜா(பா.உ) தனது உரையில் கனடாவில் வசித்து வந்தா லும் இலங்கை தமிழர்களுக்கு தொண்டாற்றி வரும் நகுலசிகாமணி தம்பதியினர் தமிழரின் வரலாற் றைப் பேணிப் பாதுகாக்க எழுதப்பட்ட இவ்விரண்டு ஆவணங்களும் முக்கிய மானதொன்றாகும். நகுலசிகாமணி தம்பதியினர் கனடாவில் வசித்து வந்தாலும் அவர் சிறு வயதில் ஈடுபட்ட அரசியல் பாரம்பரியத்தினூடாக வல்வெட்டித்துறையில் கௌரவமான மனிதராக இன்று உயர்ந்துள்ளார்கள். இலங்கை வரலாறு தமிழர்களின் அழிவில் நிருபணமாக எழுதப்படவில்லை என்பது பெரிய குறைபாடு அது இன்று நகுலசிகாமணி தம்பதியினரால் ஓரளவுக்கு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. நகுலசிகாமணி தம்பதியினர் இன்னும் பல ஆவணங்களோடு, ஆய்வுகளோடு சிறந்த வரலாற்று நூலாக இந்தச் சுவடுகளைப் பதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

திரு, எம்.ஏ.சுமந்திரன் (பா.உ) அவர்கள், ”எமது நாடானது ஒரு போர்ச்சூழல் ஊடாகக் கடந்து போகும்போது இறுதி யுத்தப் பகுதியில் ஊடகவியலாளர்கள் எல்லோரையும் அப்புறப்படுத்தி சாட்சிகளற்ற ஒரு போரை நடத்தி ஒரு இருண்ட ஊழிக் காலத்தின் ஊடே எமது சமுதாயம் சென்று கொண்டிருக்கும் போது, அந்தக்காலத்தில் நடைபெற்ற விடயத்தை ஆவணப்படுத்தல் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த . அந்தப்பணியினை நகுலசிகாமணி தம்பதியினர் சிறப்பாகச் செய்திருக்கின்றனர். இவ் ஆவணத்தில் ஒரு பக்கத்தில் இதிலே பலவிதமான விமர்சனம் வரும் அதுவே எனக்கு திருபத்தியாக இருக்கும் என இவர்கள் எழுதியிருந்தமை அவர்கள் மனத்துணிச்சலை மிகுந்த வலுவோடு வெளிப்படுத்தி உள்ளார்” எனக் கூறி இந்தக் ஆவணக்காப்பகத்தை இன்று பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.

யாழ்மேயர் திரு,இ.ஆனோல்ட், நகுலசிகாமணி தம்பதியினர் கனடாவில் எமக்கு அறிமுகமானவர்கள். எமது அமைப்பின் நிகழ்வுகளில் பங்கெடுப்பவர்கள். அவர்கள் வீட்டிற்கு நாம் சென்றபோது ஒரு வரலாற்றுக்கூடமாகவே தென்பட்டது. இன்று அவர்கள் பிறந்த மண்ணில் நடாத்தும் ஆவணக்காப்பகத்திலுள்ள பொக்கிஸங்களைப் பார்த்து, ரசித்து வியந்தேன்” என்றார். திரு,சரவணபவன் (பா.உ) “இக்காப்பகத்திற்கு வரவேண்டும் என நினைத்து வந்தேன். திருப்தியாக இருந்தது. இதற்கு என்னால் இயன்ற ஆவண சம்பந்த மான உதவிகளைச் செய்வேன் என்று கூறி வாழ்த்தினார். திரு,சிவாஜிலிங்கம் (மாகாண.ச.உறு) “ஆறாம் வருடம் பூர்த்தியடைவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இங்கு பல்கலைக்கழக மாணவர்களும் பயனடைகிறார்கள் என அறிவேன். அண்ணன் நகுலசிகாமணி அவர்கள் சிறு வயதில் எடுத்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளார்” என்றார். வல்வை நகரசபைத் தலைவர் திரு. கருணானந்தராஜா, வெளிநாடுகளிலிருந்து இந்திரவிழாவிற்கு வந்த வல்வையர் பலரும் வந்து சிறப்பித்தனர். இரவு விருந்து நடைபெற்ற பின்பு வருகை தந்தவர்களுக்கு அன்பளிப்பாக நூல்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top