இடதுசாரித் தலைவர்கள் வல்வையில் தஞ்சமடைந்ததும் இந்தியா சென்றதும் – 1940

1942 ஏப்பிரல் மாதம் பிரிட்டிஸ் அரசிடமிருந்து பூரண சுதந்திரம் வேண்டி இடதுசாரித் தலைவர்கள் கிளர்ச்சி செய்தனர். திரு.என்.எம்.பெரேரா, திரு.பிலிப்குணவர்த்தனா, திரு. கொல்வின் ஆர்.டி.சில்வா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு கண்டி போகம்பரை சிறையில் அடைத்து வைக்கப் பட்டனர்.

அநுராதபுரத்தில் தனதரசுரிமையை இழந்த அபநாயகன் (கி.பி 285 293) நாகதீபத்திற்குச் சென்று அங்குள்ள வல்வைத்துறைமுகம் (பல்லவத் +துறை) சென்று இந்தியாவிற்குக் கடல்மார்க்கமாகச் சென்ற சம்பவத்தை மகாவம்சம், சூளவம்சம் ஆகிய வரலாற்று நூல்கள் எடுத்துரைக்கின்றன. வரலாறுகள் திரும்பவும் வரும் என்பதற்கமைய சிறையில் அடைத்துவைக்கப்பட்ட தலைவர்கள் அதிலிருந்து தப்பி வல்வெட்டித்துறைக்குவந்து உதவிகோரியபோது சிலநாட்கள் பாதுகாப்பாகத் தங்கவைத்து இந்தியா கொண்டு சென்று தப்பவைத்தனர்.

இந்த உதவியை முன்னின்று செய்தவர்கள் ஷெல்கம்பனி அதிபர் திரு. முருகுப்பிள்ளை, திரு.செந்திவேல், கம்யூனிஸ்ட் கொள்கையில் நாட்டம்கொண்டு சிங்கப்பூர் அரசால் நாடுகடத்தப் பட்ட சிங்கப்பூர் திரு.சிறீ என்பவரும், திரு.எஸ்.புவனேஸ்வரராசா ஆசிரியர், திரு.ஏ.என்.வேலாயுதம் (சட்டத்தரணி), புலோலி தர்மகுலசிங்கம் ஆகிய கம்யூனிஸ் தோழர்கள்.

வல்வைப் புகழ்பெற்ற கடலோடிகளான பாஞ்சாலியப்பா (வைத்திலிங்கம்) மற்றும் பயில்வான் சோமு (சோமசுந்தரம்) ஆகியோரே படகுமூலம் தமிழகத்திற்கு கொண்டு சென்று தப்பவைத்த வர்கள் ஆவார்கள்.

பின்பு வல்வைக்கு 1967ல் விஜயம் செய்தபோது மந்திரி பிலிப்.குணவர்த்தனா இந்நிகழ்வைக் கூறி நன்றி தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top