சுமந்திரனுக்கு வல்வையில் மாலை; Shame’ மா

Capt.அதிரூபசிங்கம் ஆதவன்
Editor of www.valvettithurai.org
சுமந்திரனுக்கு வல்வையில் மாலை; Shame’ மா?

கடந்த மாதம் வல்வை ஆவணக்காப்பகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி விழாவொன்று ஊரிக்காட்டில் அமைந்துள்ள வல்வை ஆவணக்காப்பகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, திரு.சரவண பவன் மற்றும் யாழ்மாநகரசபை மேய் ஆனோல்ட், வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வல்வை நகரசபைத் தலைவர் கருணானந்தராசா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இதை விட இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத் தரணியுமான M.A.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

விழாவை ஏற்பாடு செய்து நடாத்தியவர்கள் வல்வையைச்சேர்ந்த கனடாவில்வசிக்கும் நகுலசிகா மணி & உமா தம்பதியினர். வல்வை ஆவணக்காப்பகத்தை நிறுவி அதனைத் தொடர்ந்து தாங்க ளாகவே பராபரித்து வருபவர்கள்.

தற்பொழுது எங்கள் பிரதேசங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் மாலை என்பது கட்டாயம் என்றா கிவிட்டது. மாலை அணிவிக்கும் சம்பிரதாயம் என்பது காலம் காலமாக நிலவி வருகின்ற போதும் தற்போது அதன் முக்கியத்துவம் அதிகரித்து வருன்கிறது. நிகழ்வுகளில் மாலையை ஒருவருக்கு மட்டும் அணிவித்தால் சிக்கல் என்ற நிலையில் பலருக்கும் போடவேண்டிய நிலமை.

ரேவடி ஆழிக்குமுரன் ஆனந்தன் நினைவு நீச்சல்தடாக அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு வந்திருந்த அமைச்சர் சமங்களசமரவீர, ஆனந்தன் குடும்பத்தினர் மற்றும் அன்று வந்தி ருந்த விருந்தினர் பட்டாளத்திற்கு நம்மவர்கள் சிலர் ஓடி ஓடி மாலை போட்டார்கள். திருமதிகளும் அடக்கம். மாலை வாதி முன்னுக்கும் பின்னுக்கும் நின்றுகொண்டு மாலை போட மாலைபோட நின்றவர்களை லைற் றாக ஓடவிட்டுக் கொண்டிருந்தார். இன்று காணொளியில் பார்த்தாலும் சங்கடப்படவைக்கக் கூடிய நிகழ்வு இது.

முன்னைய காலங்களில் கௌரவவிருந்தினர் ஒருவர் என்றிருந்து தற்போது 2, 4, 8, 10 என்ற லெவலி ற்கு கௌரவவிருந்தினர்கள் எண்ணிக்கையும் சென்றுகொண்டிருக்கிறது. தற்போது பெரும்பா லும் மாலைகள் வீதியால் (Life vest) அணிந்தபடி நீரில் பயணமொன்றிற்கு ஆயத்தமாகின்றார்கள் !!!

சிலருக்கு மாலை தானாக கிடைத்துவிடுகின்றது. சிலர் கிடைக்கவைத்து விடுகின்றார்கள். பலருக்கு வாழ்நாளில் மாலை கிடைக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதனால் தான் கட்டையில் போகும் கடைசி நாளின்போது ”இந்தா பிடி உனக்கு மாலை” என்று போட்டு விடுகின்றார்கள். மரணவீட்டிலும் மாலைக்கு தானாக முண்டியடிக்கக்கூடாதென முன்நாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று நடந்த மாகாணசபை அமர்வில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக சில உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளின்போது பதில் அளித்திருந்தார் (“மாலை வண்ணமாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை” என்ற மாலைபற்றிய அழகான பாடல் திருவருள் என்ற படத்தில் குன்னக்குடி ஆர்.வைத்தியநாதன் இசையில் சுசீலா பாடியுள்ளார். இவ்வாறு செல்லும் மாலைக்கதையை இத்துடன் நறுத்தி விடயத்திற்கு வருகிறேன்.

குறித்த ஆவணக்காப்பக நிகழ்வில் விருந்தினர்கள் அனைவரும் உரை நிகழ்த்தினார்கள். விருந்தினர்கள் உரை நிகழ்த்த ஆரம்பிக்கும்போது மாலை அணிவிக்கப்பட்டார்கள். சுமந்திரன் உடபட.

சலசலப்பு சுமந்திரனுக்கு அணிவித்ததில்தான். இங்கு இந்தவிடயம் சற்றேனும் அலட்டிக்கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் புலம்பெயர் தேசங்களிலுள்ள நம்மவர்கள் சிலரிடையேயும் பகுதி பகுதியாக சமூகவலைத்தளங்களிலும் நிகழ்வின்பின்னர் ஓரிரு நாட்கள் பேசப்பட்டது. நானும் விழாவில் கலந்துகொண்டதையறிந்த சிலர் என்னிடம் ஏன்? என்று கேட்டார்கள். அதாவது விழா ஏற்பாட்டாளர்கள் ஏன் சுமந்திரனை நிகழ்விற்கு அழைத்தார்கள்? ஏன் மாலையணிவித்தார்கள்? என்றும் கேட்டார்கள். சில வாட்ஸ்அப் குறூப்புகளிலும் பேசப்பட்டது. “ஏன் சுமந்திரனை அழைத்தார்கள், மாலை அணிவிப்பு தேவைதானா? It is shame. ( shame என்றால் வெட்கக்கேடு).

நிகழ்வு இடம்பெற்றது வல்வை ஆவணக்காப்பக (Museum)த்தில். வல்வை ஆவணக்காப்பகம் என்பது நகுலசிகாமணி தம்பதியினரின் முயற்சியின் வடிவம். நிகழ்வை நடாத்திய வர்களும் அவர்களே. திரு.நகுலசிகாமணி அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தமிழரசுக்கட்சி விசுவாசி. அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் அனைவரும் அவரது நண்பர்கள். உரை நிகழ்த்தும்போது அவர்கள் மரியாதை நிமிர்த்தம் நகுலசிகாமணி அவர்களாலேயே மாலை அணிவிக்கப்பட்டார்கள். தமிழரசுக்கட்சித் தலைமையிலான கூட்டமைப்பைத் தான் இதுவரை மக்கள் பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவரகிறார்கள்.

ஆவணக்காப்பகத்தைத் தனியாக நிர்வாகித்துவரும் நகுலசிகாமணி தம்பதியினர் காப்பகத்தை மேலும் விஸ்தரிக்க விரும்புகிறார்கள். தமது வயதனைக்கருதி காப்பகத்தை நிரந்தரமாக எவ்வாறு எதிர்காலத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தலாம் என முயற்சித்து வருகின்றனர். இதற்கு அவர்களுக்கு பணபலம், அரசியற்பலம் தேவைப்படுகிறது. இதன் நிமிர்த்தம் தமக்குத் தெரிந்த, பழகிய தமிழ்ப்பிரமுகர்களை விழாவிற்கு அழைத்திருந்தார்கள். “இலங்கையில் இதுபோன்றதொரு ஆவணக்காப்பகம் அமைந்திருப்பது வல்வையில் மட்டும்தான்”. மிகவும் பெருமைப்படவேண்டிய விடயம் இது.

ஆவணக்காப்பகத்தையும் அதனை உருவாக்கி வெற்றிகரமாக நடர்த்திவருபவர்களையும் ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக்கொண்டு நிறைவுவிழா கொண்டாடுவதையும் பாராட்டாமல் – நிகழ்வின் மறுபக்கத்தை மட்டுமே பார்த்து விமர்சிப்பது தவறு.

இது ஒரு உதாரணம்தான்.
இதுபோன்ற பலவிடயங்களில் எங்களில் பலரும் கிங் மேக்கர்போன்று விமர்சிக்க முனைந்து வருகின்றோம். விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் அது முழுமையானதாக இருக்கவேண்டும். போகிறபோக்கில் (சுமந்திரன் கலந்துகொண்ட நிகழ்வில் கலந்துகொண்டதையும் shame என்று விமர்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சுமந்திரன்மீது விமர்சனத்தை தெரிவித்தவர்கள் இதே நிகழ்வில் கலந்துகொண்ட மாவையையும் சரவணபவனையும் ஏற்றுக்கொள்கிறார்களா?

கடந்தவாரம் உடுப்பிட்டியில் புதிதாகத் திறக்கப்பட்ட கரவெட்டிப்பிரதேசச்சபையின் கலாச்சார மண்டபத்திறப்பு விழாவிலும் சுமந்திரனும் மத்திய அமைச்சர் ஒருவரும்தான் பிரதமவிருந்தினர்கள். சுமந்திரன்மீது எனக்கு அதிருப்தியுண்டு. பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தடவையாவது இவர்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று கடந்ததேர்தலின் போது எனக்குத் தெரிந்தவர்களிடம் கூறினேன். ஆனாலும் இந்த அதிருப்தி என்போன்றவர்களுடனும் சமூகவலைத்தளங்களுடனும் நின்று வருகின்றதுபோல் தெரிகின்றது, சற்று விதிவிலக்காக கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளுராட்சித்தேர்தலில்.

“பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் பலரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக சுமந்திரன் தமிழரசுக்கட்சியால் மென்மேலும் பலமடைந்து வருகின்றார். இது வரை தமிழரசுக்கட்சிதான் தமிழரின் பிரதான கட்சியாகவும் விளங்கிவருகின்றது. ஆவணக்காப்பக நிகழ்வுபோன்ற இன்னொருநிகழ்வு இந்தவருடம் தைப்பொங்கல் தினத் தன்று இடம்பெற்ற பட்டப்போட்டிநிகழ்விற்கு பிரதமவிருந்தினராக அப்போதைய கடற்றொழில் மற்றும் நீர்வளஅமைச்சர் மகிந்த அமரவீர அழைக்கப்பட்டிருந்தார்.” பெரும் பான்மை அமைச்சரொருவர் வல்வையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு பிரதமவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்தமையும் பலரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது”. குறிப்பாக புலம்பெயர்தேசத்து நம்மவர்களிடம்.

அம்மன்கோயில் திருவிழாவிற்கு லண்டனிலிருந்து வந்திருந்த நண்பன் ஒருவனும் ‘பட்டப்போட்டிக்கு சிங்கள அமைச்சர் ஒருவர் அழைக்கப்பட்ட விடயத்தைக் கேள்விப்பட்ட தங்களில்பலர் குழம்பிப்போய்விட்டதாகக் கூறியிருந்தான். அந்தநிகழ்வில் பெரும்பான்மையின அமைச்சரை அழைத்ததில் தவறிருந்ததாக எனக்குப்புலப்படவில்லை. அவர் அமைச்சர் என்ற ரீதியிலேயே அழைக்கப்பட்டிருந்தார். அண்மையில் வடமாகாண மகளீர்விவகார அமைச்சர் அனந்தி.சசீதரனிடம் “எப்படி உங்கள் அமைச்சு எனக்கேட்டேன்” மிகவும் குன்றிய அமைச்சு எங்களுடையது. நிதி ஒதுக்கீடுகளுக்கு மத்திய அமைச்சிடம் தான் நாடி நிற்கவேண்டி உள்ளது” என்றார். எனவே மத்தியஅமைச்சரை நேரடியாக விழாவிற்கு அழைப்பதை சாதுரியமானதென ஏற்பாட்டாளர் கருதினால், அவர்கள் நகர்வு சரியானதெனக் கூறுவேன்.

எதுவித பயனுமில்லாமல் ஏன் கடற்றொழில் நீர்வள அமைச்சரை நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள் என்ற குழப்பம் எனக்கு இன்றுமுண்டு. எமது பிரதேசங்களுக்கு தற்போ தைய உடனடித்தேவை திருப்திகரமான அபிவிருத்தி. இது கல்வியாக, வேலைவாய்ப்பாக இருக்கட்டும், அல்லது அரிக்கும் கடற்கரையைச் செப்பனிடுவதாகட்டும்………… மாகாணஅமைச்சின் பங்கு இருந்தாலும் இவற்றை மத்திய அமைச்சினாலேயே பெருமெடுப்பில் செய்யமுடியும். நலன்புரிச்சங்கங்களாலும், தனிப்பட்ட புலம்பெயர்ந்த மக்களா லும் இவற்றைச் செய்யமுடியாது. கொச்சைப்படுத்தும் நோக்கில் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை.

ஆகவே சுமந்திரன்போன்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது பெரும்பான்மையின அமைச்சர்களையோ இங்கு விழாக்களுக்கு விருந்தினர்களாக அழைப்பது விரும்பியோ அல்லது விரும்பாமலோ நிகழ்பவை சந்தர்ப்பவாதம் அல்ல. (எழுத்துக்கு அழகில்லை எனினும்) சுருங்கக்கூறின் சிலர் வேண்டாப் பெண்டாட்டி அல்லது வேண்டாப்புருஷனுடன் தத்தம் பிள்ளைகளுக்காக சேர்ந்திருப்பது போலதான் இவையும் நிகழ்கின்றன. அவ்வளவுதான்.

இதுபோன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் விமர்சனங்கள் வெளியிடுவதும் பொருத்தமற்றவையாகும். எடுபடாதவையாகவே அமைந்து விடுகின்றன…….. அமையும்……

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top