வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள் வெளியீட்டு விழா – 1997ல்

புலம் பெயர்ந்து கனடா ரொரொன்டோ மண்ணில் வாழ்பவர்கள் ஒரு வகையில் முற்பிறப்பில் பல நன்மை செய்தவர்கள் என்று கூறினால் மிகையாகாது. வாரம் ஒரு விழா என்று கலைப்படைப்புகள் ஏராளம்.

இவையனைத்தும் நம்மவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். அந்தவகையில் வல்வெட்டித்துறையைத் தாயகமாகக் கொண்ட திரு.நகுலசிகாமணி அவர்கள் நீண்டகால முயற்சியின் பயனாக எழுதி வெளியிட்டுள்ள “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” அவ்வூர் மக்களிலும் பார்க்க ஏனையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

‘வல்வெட்டித்துறை’ ஊரின் வரலாற்றுத் தொகுப்புகளை பல ஆண்டுகளாகத் தம் ஊரிலும் பின்னர் புலம்பெயர்ந்த நாட்டிலும் சேகரித்து அதனை நூல் உருவில் கொண்டு வந்து 1997 யூலை 26ம் திகதி சனிக்கிழமை வெளியிட்டுவைத்தார்.

இவ்வெளியீட்டு விழா ரொரொன்டோ ‘மரினா’ மண்டபத்தில் “தந்தை செல்வா” அரங்கில் சட்டத்தரணி கனகமனோகரன் தலைமையில் கச்சிதமாக இடம்பெற்றது. விழா ஆரம்பம்முதலே மண்டபம்நிறைந்த மக்கள்கூட்டம். திரு.திருமதி.சிதம்பரநாதன், திரு.திருமதி.ஜெயபாலன் தம்ப தியினர் குத்துவிளக்கேற்றினர். திருமதி.திருமறைச்செல்வி .பத்மநாதன் காசி.ஆனந்தன் இயற்றிய தமிழ்தேசிய கீதத்தைப்பாடி மகிழ்வித்தார். செல்வன்.சந்திரசேகர் நகுலசிகாமணி வரவேற்புரை யாற்றி அனைவரையும் வரவேற்றார்.

பேச்சாளர்கள் என்று பெரியபட்டியல் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் கருத்துக்களைக்கூறி மலர் வெளியீட்டிற்கு உயிர் கொடுத்தார்கள். கலாநிதி பாலசுந்தரம், சாமி.அப்பாத்துரை, சட்டத்தரணி கரிகாலன், சட்டத்தரணி த.ஶ்ரீபதி, சந்திரமோகன், ஈழநாடு பத்திரிகை ஆசுிரியர் பரமேஸ்வரன் என பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

செல்வர்கள் ந.சௌமியன், எஸ்.சபேஷ் ஆகியோரின் வயலின் இசை நிகழ்ச்சி சபையோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் செல்விகள்.அனிதா, விஜிதா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கலாநிதி பாலசுந்தரம் உரையாற்றும்போது இதுபோன்ற நூல்கள் பல்வேறு மக்களிடமிருந்தும் வெளிவரவேண்டும். நகுலசிகாமணியின் இம்முயற்சி வரவேற்கப்பட வேண்டிய விஷயமென்றும், நம் ஆய்வாளர்கள் சிலர் விட்டதவறுகள் முன்னர் பல்வேறு பிளவுகளை ஏற்படுத்தியிருந்தன. உண்மையிலேயே தென்னகத்திலிருந்து வந்தவர் களினால் ஏற்பட்ட ஊர்ப்பெயர்கள் சில வடக்கில் உள்ளன என்பதை நிரூபிக்கக் கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.

இந்நூலின் முதற்பிரதியை வல்வெட்டித்துறை முன்நாள் நகரசபைத்தலைவர் எஸ்.சுந்தரலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவரைத் தொடர்ந்து கமலா.பெரிய தம்பி, மற்றும் ஊர் பெரியவர்கள், வெளியூர் நண்பர்கள் யாவருக்கும் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிநிறைவில் நகுலசிகாமணி நன்றிதெரிவித்து பேசுகையில்தாம் இந்நூலைத்தயாரிக்க சேகரித்தவிபரங்கள்பற்றி வெளிப்படையாகக்குறிப்பிட்டார். வந்தவர்களை சிற்றுண்டியும் குளிர்பானமும் வழங்கி உபசரித்தனர்.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top