1958ல் சிங்கள எதிர்ப்புப்போராட்டம் தீவிரமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடை பெற்ற போது இலங்கைமுழுவதும் இனக்கலவரம் வெடித்து நாடுதளுவிய ஊரடங்குச் சட்டம் பிறப்பிக் கப்பட்டது. அன்று கிழக்கில் தனியொரு தமிழரசுக்கட்சிப் பிரதிநிதியாகவிருந்த திரு.செ.இராச துரைக்கு உதவியாகவிருப்பதற்காகவும் அங்குள்ள நிலவரங்களை அறிந்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் மீன்பாடும் தேன்நாடாம் மட்டுநகருக்கு திரு.அ.அமிர்தலிங்கம் போக விழைந்தார். ஆனால் அன்றிருந்த சூழிநிலைகள் தரைமார்க்கமாகப் பயணம்செய்வதற்கு ஏற்றன வாக இருக்காத காரணத்தால் கடல்மார்க்கமாக மட்டக்களப்பைச் சென்றடைய முடிவை எடுத்தார் அமிர். துணிவுடமையைத்தன் அணிகலனாகக் கொண்டிருந்த அமிர் தன் துணைவியார் மங்கை யற்கரசி அவர்களோடும் சில இளைஞர்களோடும் கொந்தளிக்கும் கடலூடே உயிர் உடமைகளை இழந்துநின்ற சொந்த இரத்தங்களைச் சந்திப்பதற்கு வல்வெட்டித்துறையிலிருந்து வள்ளம் (தோணி) ஒன்றில் பயணமானார்.
அதிகாரிகள் மகாதேசாதிபதிக்கு, மட்டக்களப்புப்பகுதியை ஆக்கிரமித்துதனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தோடு இளைஞர் படை ஒன்றோடு அமிர்தலிங்கம் மட்டுநகரை முற்றுகையிட்டுள்ளாரென்று தெரிவிக்க அவர்களை உடன் கைதுசெய்யும்படி சேர்.ஒலிவர்குணத் திலகா உத்தரவிட்டார். திரு.அமிர்தலிங்கம் பொலிஸ்நிலை யத்தில் இருந்தபடி மகாதேசாதி பதியோடு தொடர்புகொண்டு தன் கைதுக்கு விளக்கம்கோரி எதிர்வாதம் செய்தார். உண்மையை உணர்ந்த மகாதேசாதிபதி தன் மனவருத்தத்தை தெரி வித்து கொழும்பு செல்வதற்கு விமானம் ஒழுங்கு செய்தார். மட்டுநகர் செல்வதற்கு திரு.அமிர்தலிங்கம் தம்பதியினருக்கு வள்ளம் கொடுத்து உதவியவர் பிரபலவர்த்தகரும் வைரமாளிகை ஸ்தாபகருமாகிய திருமதி.கனகசுந்தரம் இளை யாச்சி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இலட்சிய இதயங்கள்” அமிர் எழுதிய நூல் பக்கம் 102.
“என்று முடியும் எங்கள் போட்டிகள்” எஸ்.கே.மகேந்திரன், பக்கம் 207.


