பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் முறையான பாடசாலைகள் இருக்கவில்லை. செல்லம் வாத்தியார் என்ற வயித்தியலிங்கப் புலவரின் மூத்தமகனாகிய சங்கரநமச்சி வாயம், வேதவனம் உபாத்தியார் போன்றவர்கள் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்து தமிழ்மொழியையும் ஆரம்பக்கணிதத்தையும் கற்பித்து வந்தனர்.
சிதம்பராக் கல்லூரி
இவ் ஆங்கில வித்தியாசாலை வல்வைப் பெரியாராகிய திரு.கு.சிதம்பரப்பிள்ளை அவர்களால் 1896ல் தொடங்கப்பட்டு ஆலடியில் நடைபெற்றுக் கொண் டிருந்தது. பாடசாலை தொடங்குவதற்கு முதல்நாள் மாலை சிதம்பரப்பிள்ளையவர்கள் ஊரிலுள்ள பெற்றோர்களை நெடியகாட்டுப் பிள்ளையார்கோயில் வீதியில் ஒரு கூட்டத் திற்கு அழைத்து உருக்கமான சொற்பொழிவாற்றினார்.
அதில் அவர் “தான் ஒரு சிறியகுடும்பத்தைச் சேர்ந்தவரென்றும் ஆங்கிலம்படிக்க ஆசைப்பட்டும் இவ்வூரில் அந்தவசதி இல்லாததால் பருத்தித்துறைக்கு ஒவ்வொரு நாளும் நடந்துசென்று மதிய உணவிற்குச் சந்தையில் கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கை இரண்டு சதத்திற்கு வாங்கிச் சாப்பிட்டு மாலையிலும் நடந்துவந்து மிகவும் கஷ்டத்தோடு ஆங்கிலம்கற்று அரசாங்கவேலையில் சேர்ந்த தாகவும் தான்பட்ட கஷ்டம் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வுரில் வித்தியா சாலை ஆரம்பிப்பதாகவும் அதற்காக ஊரவர்கள் ஆதரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.” இப்போது அப்பாடசாலை அவர் நினைவாக சிதம்பராக் கல்லூரியாக வளர்ந்திருக்கிறது.
1896ம் வருடம் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டசமயம் பருத்தித்துறையைச் சேர்ந்த திரு.விநாய கமுதலியார் அவர்களும் அவரைத்தொடர்ந்து எ.நாகமுத்து, வி.அருணாசலம் ஆகியோரும் முகா மையாளர்களாக இருந்து கல்லூரியை வழிநடத்தி வந்தார்கள். 1901ம் வருடம் திரு.ஞ.தையல்பாகர் பொறுப்பேற்று 1960ம் வருடம் அரசினால் கல்லூரி பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்வரை தொடர்ச்சியாக 60 வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார். 1925ம் ஆண்டளவில் திரு.வண்ணமா மலை ஐயங்கார் (சென்னை) அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு திரு.கிருஸ்ணஐயங்கார் (B.A சென்னை), திரு.சிவசைலம் ஐயர் B.A அவர்களும் இணைந்து கொண்டார். அவர்களுக்குப் பாட சாலையுடன் தங்குமிடவசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. அவர்களோடு எமது அயலூரிலும் வல் வையிலும் உள்ள ஆசிரியர்களும் சேவையாற்றினர். அதிபராக திரு.தை.அருள்சுந்தரம், திரு.சத்திய மூர்த்தி, திரு.கோ.செல்வநாயகம், திரு.செ.யோகச்சந்திரன், திரு.சி.தங்கராசா, திரு.எஸ்.சிவநேசன், திரு.என்.அரியரெத்தினம் ஆகியோர் கடமை புரிந்துள்ளனர்.


