1960ம் ஆண்டு ஶ்ரீ மாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர் அவர் தனது கணவர் கொண்டுவந்த தனிச் சிங்களச்சட்டத்தை அமுல் நடத்த ஆவன செய்தார். அரசாங்கத் திணைக்களங்களில் இருந்து கடிதங்கள் வந்தன. வடக்கு கிழக்குப் பிரதேச கச்சேரிகளுக்கு சிங்கள உத்தியோகத்தர் அனுப்பப்பட்டனர். சிங்கள ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்பனர். இதை எதிர்த்துத் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வா தலைமையில் அறவழியில் போராட்டம் நடாத்தத் தீர்மானித்து 1961ம் ஆண்டு 20ம் திகதி பெப் ரவரி மாதத்தில் யாழ்ப்பாணம் கச்சேரி முன் மறியல் ஆரம்பமானது. அரச உத்தியோகத்தர், அரசஅதிபர் உட்செல்லாதவாறு தடுக்கப்பட்டனர்.
முதல்நாள் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தலைவர்களும் தொண்டர்களும் தாக்கப் பட்டனர். தமிழரசுக் கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வடக்கு கிழக்கு முழுவதும் தமிழர் இனம் சமயம் வேறுபாடில்லாத ஏகோபித்த போராட்டமாக மாறியது. வடக்கு – கிழக்கு அரசுநிர் வாகம் நடைபெறாது ஸ்தம்பித்தது. இரண்டரை மாதங்க ளின் பின்பு இராணுவத்தை அனுப்பி ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து தலைவர்களைக் கைது செய்து அறப்போராட்டத்தை அடக்கினர்.
அப்போது எம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரைரத்தினம், அப்போதைய பட்டினசபைத் தலைவர் திரு.க.சபாரத்தினம் ஆகியோரும் வேறுசில வல்வைவர்த்தகர்களும் கைதுசெய்யப் பட்டு பனாகொடை இராணுவ முகாமில் வைக்கப்பட்டனர்.
அன்று வடபகுதிக்கு வந்த இராணுவத்தினர் வல்வையிலும் ஊரிக்காடு அமெரிக்கன்மிஷன் சபையினருக்கு உரிமையான காணியில் முகாம் அமைத்தனர். வல்வைக்கு அன்று வந்த இராணுவத்தினரை பிரேமதாஸா ஜனாதிபதியாக வந்தபின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடாத்திய பேச்சு வார்த்தையின் போதுதான் வெளியேற்ற முடிந் தது. முப்பது வருடங்களுக்குமேல் வல்வை மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றன.


