வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை (!843 – 1091)

இவர் 1843ம் ஆண்டு மாசித்திங்களில் சங்கரநாதருக்கு மூத்தபுதல்வராக வல்வையில்பிறந்தார். இவர் உடுப்பிட்டி திரு.அ.சிவசம்புப்புலவரிடம் இலக்கிய இலக்கணங்களை யும் விரைந்து கற்றுப் பண்டிதரானார். சித்தாந்த நூல்களையும் நூல்களையும் கற்று சிவமதத்தைப் பரப்பினார். 1874ம் ஆண்டு “சிந்தாமணி நிகண்டு” என்றநூலை இயற்றி இவ்வுலகிற்கு ஈய்ந்தார். 1878ம் ஆண்டில் “நம்பியகப்பொருள்” என்ற இலக்கணநூலுக்கு விளக்கஉரையினை வெளியிட்டார். கந்தரலங் காரத்திற்கு புதியதோர் விளக்கம் தந்தார். கந்தபுராணம் தெய்வானை திருமணப்படலத்திற்கும் வள்ளியம்மை திருமணப்படலத்திற்கும் நல்ல சிறந்த ஆராய்ச்சி உரைகள் எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களும் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்களின் சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர் திரு.ச.பொன்னுஸ்வாமி அவர்களால் சென்னை வித்தியாநு பாலன யந்திரசாலையில் 1955ம்ஆண்டு பதிப்பிக்கப்பட்டு அப்போது பாடநூலாவிருந்தது குறிப்பிடத் தக்கது. சூரபத்மன் வதைபடலத்திற்கும் உரையெழுதியுள் ளார். வல்வை வைத்தீஸ்வரர் பதிகம், செல்வச்சந்நிதித் திருமுறை, கந்தவனத்திருப்பதிகம், சிவராத்திரிபுராணம், சீமந்தளிபுராணம், கன் ஜனமாலை, கல்வளையந்தாதியுரை முதலியனவும் அச்சிட்டு வெளியிட்டுவைத்தார்.

கந்த மலர் பொழில்புடை சூழ் தில்லை வனத்தறிஞர் திருக்கடைக் கனோக்கி

முந்தவுரைத் தனர்பலரு மாயினும் யாமக நூன் மொழி வழாமற்

பந்தமறுத் திடுசிவராத் திரிவிரத சரிதைதனைப் பாடுகென்னச்

செந்தமிழினுயர் விருத்தப் பாவதனாற்றிரட்டி யொன்றைச் செப்பலுற்றேன்.

என்பது சிவராத்திரி புராணத்தின் பாயிரச் செய்யுள்.

இப்புராணத்தினை வல்வை ச.வயித்தியலிங்கபிள்ளை சென்னை வித்தியாவர்த்தினி அச்சுக்கூடத்தில் விசுவருடம் ஆவணிமாதம் (1885) பதிப்பித்து வெளியிட்டு வைத்துள் ளார் என “ஈழம் தந்த ஆறுமுகநாவலர்” சரிதத்தில் 159ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிகார பீடத்தில் இருந்த அந்நியரின் அரசு, கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கியதொகையை நேரடியாகக்கொடுத்திட மனம்வந்திலர். கிறிஸ்தவ மிசனரிகளிடம் கொடுக் கப்பட்டது. அவர்கள் தமிழ்ப்பிரதேசங்களில் பாடசாலைகளைநிறுவி தங்கள் மதப்பிரசாரங்களை வேகமாக இடம்பெறச்செய்தார்கள். புரட்டஸ் தாந்து மதத்தவர்களுக்கும் நல்லை ஆறுமுகநாவலர் அவர்களுக்கும் இடையில் வாதப்பிரதி வாதங்களும் கண்டனங்களும்மறுப்புகளும் மும்மரமாக இடம்பெற்றன. பாதர் பிதிற்றோ என்ற கத்தோலிக்கபாதிரியாரின் அறிக்கைகளுக்கு ஆறுமுக நாவலர் அவர்களால் பதில் பகரமுடியவில்லை. ஆறுமுகநாவலர் அவர்கள் பிதிற்றோவின் அறிக்கை யைத்தனது சமகாலத்தில் வாழ்ந்த வயித்தியலிங்கம்பிள்ளை அவர்களிடமனுப்பி பாதருக்கு பதில்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளையவர்களின் காத்திரமான பதில்களைக்கேட்ட பாதிரியார் “நான் யாழ்ப்பாணத்துப் பனங்காட்டில் நரிகளைத்தான் எதிர்பார்த்தேன், ஆனால் வயித்தியலிங்கம்போன்ற சிங்கத்தை எதிர்பார்க்க வில்லை” என்று பிள்ளையவர்களுக்கு பதில் எழுதியனுப்பியதோடு நீண்டகாலமாக நாவலர் பெருமானோடு நிகழ்த்திக் கொண்டிருந்த தர்க்கவாதங்களைத் தானாகக் கை விட்டிருந்தார்.

இவர் வல்வைச் சிவன்கோயில் மடத்தில் பாரதிநிலைய முத்திராஷா அச்சியந்திரசாலையை நிறுவி “சைவ அபிமானி” என்ற பத்திரிகையை பல ஆண்டுகளாக நடாத்தி வந் துள்ளார். கிறிஸ்தவ மதம் பரவிவரும் நிலைக்கு எதிராக எழுந்த சைவ எழுச்சிக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வயித்தியலிங்கபிள்ளையவர்கள் வெளியிட்ட “சைவ அபிமானி என்ற பத்திரிகை பெரும் பங்காற்றியதுடன் வல்வெட்டித்துறை வர்த்தகர்கள் இவருக்குப் பின்னணியாக இருந்தார்கள் என மகிமை என்ற பெயரில் ஆறுமுகநாவலர் வெளியிட்ட சன்ஜிகையில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் யாழ்ப்பாணத்தில் வேளாளர்மேலாதிக்கம் இருந்தபகுதியில் கரையாரர்களின் கையோங்கியதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. ஆறுமுகநாவலர் பகிரங்கமாகவே வேளாளர்களின் நலன்களை ஆதரித்தவர். இவர் எழுதிய “கரையார்வழக்கு” எனும் நூலை எதிர்த்து வயித்தியலிங்கபிள்ளை “சாதிநிர்ணய புராணம்” என்ற நூலை எழுதினார். அதில் கரையாரின் உயர்வினை உரைத்துள்ளார்.

பேராசிரியர் கா.சிவத்தம்பியவர்கள் இவரின் நூல்களை ஆராய்ந்துகூறியதாவது வள்ளியம்மை தெய்வானையம்மை திருமணப்படலங்களுக்கு இவரது உரையினை நோக் கும்போது இவரது ஆழ்ந்த இலக்கிய ஞ◌ானம் நன்கு புலனாகிறது. சிறப்பாக வள்ளியம்மை திருமணப்படலத்திற்கான உரை அகப்பொருள் மரபை நுண்ணியதாக உணர்ந்து எழுதப்பெற்றது தெரியவரும். 122ம் பாடலான “நாற்றமும் தோற்றமும்” எனத்தொடங்கும் பாடலுக்கும் எழுதிய உரைகள் வயித்தியலிங்கம்பிள்ளையவரது ஆழ்ந்த தமிழ் இலக்கிய அறிவுக்கு ஒரு பதச்சோறாக அமைந்துள்ளது எனலாம். நம்பியகப்பெருமான் விளக்கவுரையும் இவராற் செய்யப்பட்டது என்பதை மனங்கொள்ளின் அகப்பொருள் மரபு பற்றி அவரிடமிருந்த ஆழ்ந்த இலக்கியப்புலுமை நன்கு தெரியும்.

இவர் சமயப்பணிகளுடன் நின்றுவிடாது சமூகப்பணிகளிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். மதுவொழிப்பை முன்நிலைப்படுத்தி “கள்ளுக்குடிச் சிந்து” என்ற பாடற்றொகுதியையும், பெண்களின் ஒழுக்கத்தைப் புலப்படுத்த “மாதர் ஒழுக்க சிந்து” என்ற பாடற்தொகுதியையும் எழுதி வெளியிட்டார். சென்னையில் சில காலம் தங்கி தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களை அச்சிட்ட சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களின் மதிப்பைப் பெற்றவர். மட்டக்களப்பு வித்துவான் ச.புபாலபிள்ளை பாடிய சோமவார விரதமகிமையைக் கூறும் “சீமந்தளி புராணம்” இவரது பார்வையிலே சென்னையில் 1894ம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இவர் தமிழ்நாடு சென்று விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார். சென்னையில் சி.வை.தாமோதரம்பிள்ளை தலைமையில் நிகழ்ந்த பேரவை இவருக்கு “இயற்றமிழ்ப் போதகாசிரியர்” என்னும் பட்டத்தைச் சூட்டியது. 1975ம் ஆண்டு இவரது 75வது வருட நினைவையொட்டி வல்வையில் உள்ள சனசமூகநிலையங்களில் இவரது திருவுருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன. அத்தோடு வல்வை சன சமூக நிலையத்தினரால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் எழுதப்பெற்ற “புலவர் வயித்தியலிங்கபிள்ளை” என்ற சிறு நூலும் வெளியிடப்பட்டது.

வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தினர் இரண்டாவது வெளியீடாக 1912ம் ஆண்டு வெளிவந்த புலவரவர்களின் கந்தரலங்கார உரை நூலைச் சீரமைத்து (புலவரவர்களின் பூட்டியின் மகளான) உமா.நகுலசிகாமணி அவர்களால் கணனி வடிவமைப்புச்செய்து 3ம்பதிப்பாக, 2001ம்ஆண்டு புலவரின் நூற்றாண்டுவிழாவை கனடாவில் சிறப்பாக நடாத்தி வெளியிட்டுவைத்தனர்.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top