(மணி அண்ணா) அவர்களுக்கு வல்வையில் நடைபெறும் பாராட்டு நிகழ்வை முன்னிட்டு வல்வை ஆவணக்காப்பகமும் மகிழ்கிறது
திரு.மணிவாசகர் தம்பதியினர் வல்வைக்கு வருகைதந்தவேளையில் வல்வெட்டித்துறை மாலு மிகள் நலன்புரிச் சங்கம் வரவேற்பளித்து கௌரவிக்கும் வேளையில் அவரை வாழ்த்துவதோடு, அவர்கள் இருவரும் நீண்டநாள் வாழ வல்வை வைத்தீஸ்வரன், முத்துமாரி அம்மனை வேண்டி கனடாவாழ் வல்வை மக்கள் சார்பிலும், கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும் (Images of Valvai) வாழ்த்துகிறது.
தொழில் அதிபர் வி.பி.ஞனக்கோன் அவர்களது உதவியோடு மணி அண்ணா அவர்கள் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் கப்பலுக்கு பணம் வாங்காமல் அனுப்பி வல்வையின் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமைக்கு உரியவர். 1973ம் ஆண்டு முற்பகுதியில் அம்பலவாணர் மாஸ்டர் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட மாலுமிகள் சங்கத் தில் உறுப்பினராகி புதிய மாலுமிகளுக்கான ஆரம்ப வகுப்புகளில் பங்குபற்றி பின்னர் கொழும்பிற்கு அனுப்பிவைக் கப்பட்டோம். மணியண்ணா அவர்கள் திரு.அம்பிகைபாகன் நில அளவையாளர் (தொண்டமனாறு) அவருடையபுதல்வன் குலோத்துங்கன் பொறியியலாளர் மூலம் அப்போது கொழும்பில் கட்டப் பட்டுக்கொண்டிருந்த ஹொட்டல் ஒபரோய், இன்டகொண்டினல் ஆகியவற்றில் எங்களுக்குத் தற்காலிக வேலைவாய்ப்புப் பெற்றுத்தந்தார். கனடாவிலிருக்கும் நண்பன் கோ.ஜெயபாலன், நான் உட்படபலர் வேலை செய்தோம்.
1973ம் ஆண்டு டிசம்பர்மாதம் அவுஸ்திரேலியா துறைமுகத்தில் நிற்கும் கப்பலுக்குப் புதிய ஆட்களைத் தெரிவு செய்ததில் நானும் திரு.கனகேந்திரன் உட்பட மூன்றாவது உதவிக் கப்பல் உத்தியோகத்தராக திரு.அம்பலம் மாஸ்டர், கூடவே கப்பல் கம்பனி அதிபர் சார்பில் மணி அண்ணாவும் Australia விற்கு ஒன்றாகப் பயணித்து சிட்னி சென்று ஹோட்டலில் 12 நாட்கள் தங்கி, பின் துறைமுகம் சென்று முதல் கப்பல் ஏறினேன் . நாம் ஏறியகப்பலின் பெயர் Suppreme Trader முதலில் இரும்பு வளையங்களை ஏற்றி இந்தோ னேசியா ஜகாற்றா துறைமுகத்தில் இறக்கி பின்பு மலேசியா போட்கிளாங் துறைமுகம் சென்றபோது எனது பெரியஐயா குடும்பத்தினர் 1947ல் மலேசியா சென்று குடியேறிய வர்கள். அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் அவர்களுக்கும் கிடைத்தது. அந்த உறவு இன்றுவரை நீடிக்கின்றது. தற்போது நாம் மலேசியா செல்லும்போது பெரியஐயா குடும்பத்தினர் வீடுகளுக்கும் மணி அண்ணா வீட்டிற்கும் சென்று வருவோம்.
அரசியல் மாற்றம் காரணமாகவும் இராணுவம் கடற்படைகள் நடவடிக்கைகளாலும் எம் இளைஞர்களில் பலர் வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்களில் வேலைக்குச்சேர முற்பட் டனர். தொழிலதிபர் வி.பி.ஞனக்கோன் அவர்களின் உதவியோடு திரு.தாமோதரம் மணிவாசகர் (மணி அண்ணா) அவர்கள் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் கப்பலுக்கு அனுப்பி பொருளா தாரத்தை உயர்த்திய பெருமைக்குரியவரானார். இன்று பலர் கப்பல் உத்தியோகத்தர்களாகவும் (Captain) கப்பல் பொறியியலாளராகவும் (Marine Engineers), இழுவைக்கப்பற் தளபதியாகவும் (Tugmaster) உள்ளனர். 1972ம் ஆண்டு வல்வை மாலுமிகள் சங்கத்தை ஆரம்பித்து புதிய மாலுமிகளுக்கு ஆரம்ப பயிற்சியை வழங்கி அவர்களை கொழும்பிற்கு அனுப்பியும் சேவை புரிந்தவர் கப்டன் அரு.அம் பலவாணர் ஆவார்.
பின்னர் திரு.ரங்கவடிவேல், திரு.சாந்தலிங்கம் ஆகியோரும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தார்கள். தற்சமயம் புதிய தலைமுறையினரும் தாங்களாகவே கப்பல்களில் வேலை செய்து படித்து (கப்டன்) Captain, Pilot ஆகவும் வேலை செய்கிறார்கள்.


