ந.நகுலசிகாமணி, உமா நகுலசிகாமணி.
இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் (Historical Anecdotes of Sri Lankan Tamils).
கடந்த ஒக்டோபர் 8 சனி மாலை ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் திரு.வீரசுப்ர மணியம் அவர்கள் தலைமையில் திரு.சோமசச்சிதானந்தம் (பொதுநல சேவையாளர்) அவர்களின் தமிழ்த் தாய்வாழ்த்தும் அதனைத் தொடர்ந்து கனடியகீதமும் பாடி, இலங்கையில் அனைத்துப் போராளி கள், மக்களுடன், சந்துரு, சௌமியன் ஆகியோருக்கும் வணக் கம் செலுத்தப்பட்டது.
பின்பு பிரமுகர்களின் உரையும் நூல் அறிமுகமும் ஆரம்பமானது. ரொரான்டோ அண்ணா மலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டிய தன் அவசியத்தைக் கூறி இந்தக் கடினபணியை பல ஆண்டுகளாக நகுலசிகாமணி ஆற்றிவருவதை நான் நன்கறிவேன் என்றார். அடுத்து பாரா ளுமன்ற உறுப்பினர் திரு.ஹரி ஆனந்தசங்கரி, இரண்டு நாட்களுக்கு முன்னர் கனடிய பாராளுமன்றத் தில் “தமிழ் மரபுரிமை மாதம்” பற்றிச் சட்டவாக்கம் நிறைவேற்றிய பின்னர் முதலாவதாக இங்கு வருகைதந்தபொழுது மல்லிகை மாலை அணிந்து கௌரவிக்கப் பட்டார். திரு.ஹரி.ஆனந்தசங்கரி உரையாற்றும்போது தான் இங்குவருவதற்கு முதற் காரணியாக இருந்தது, சந்துரு சௌமியன் கனடிய இளையோர் அமைப் பினூடாக “சுனாமி நிதி” சேர்ப்பின்போது அதிக பணம் சேர்த்து உதவியவர்கள் என்பதையும், நான் சந்துருவுடன் பழகிய நாட்கள் இன்றும் என் மனதில் உள்ளது. இவர்களது பெற்றோர் இந்தப்பணியோடு நின்று விடாமல் தாயகம் சார்ந்த வேறு பணிகளிலும் ஈடுபட்டுக் கொண் டிருக்கிறார்கள். இந்த நூலை தமிழுடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது மேலும் சிறப்பானதாகும் என்றார் .
திரு.கனகமனோகரன் தனதுரையில் நகுலன் வரலாற்றுப் புதையல்களைத் தேடி அவற்றை அரும்பெரும் ஆவணக்காப்பகமாக, காவியமாக பொருட்செலவில் ஆக்கியுள் ளார். வல்வைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் யாவரும் சிதைந் து கிடக்கும் திரு,பிரபாகரன் வாழ்ந்த இல்லத்தையும், ஆவணக்காப்பகத்தையும் பார்க்கத் தவறுவதில்லை. எனக்கும் அதைப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து. நண்பன் நகுலன் ஔவையின் கூற்றுப் படி “திரைகடல் ஒடித் திரவியம் தேடு” என்பதற்கமைய திரவியம் தேடியதல்லாமல் 18 நூல்களைத் தேடியும் எழுதியும் நிலைத்துநின்று வாழக்கூடிய குழந் தைகளாக எமக்கு தந்துள்ளார்கள். அவர்களின் செயற்பாட்டிற்காக எனது இதயபூர்வமான வாழ்த்துக் கள் அடுத்து சட்டத்தரணி தம்பையா.சிறீபதி நண்பன் நகுலசிகாமணி நூலில் பலவிடயங்கள் பற்றி எழுதியுள்ளார். அரசியல் பற்றி சமநிலையில் யாரையும் புண்படுத்தா மல் எழுதியுள்ளமை பற்றிக்கூறி மறுபதிப்பு வருமானால் மேலும் பல விடயங்கள் சேர்த்து வரவேண்டுமென தனது விருப்பத்தைக் கூறினார்.
அதன்பின்பு திரு.ஈழவேந்தன், கவிஞர் கந்தவனம், திரு.பொன்னையா விவேகானந்தன், உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம், பொன்.புவனேந்திரன், திரு.மு. தியாகலிங்கம் ஆகியோரின் சிறப்பான உரையைத் தொடர்ந்து திரு.லோகன் கணபதி (மாக்கம் நகரசபை உறுப்பினர்) தனது உரையின் இறுதியில் மாக்கம் மேயர் உறுப்பி னர் சார்பில் நூலை எழுதிய ந.நகுலசிகாமணி, உமா நகுலசிகாமணி ஆகியோ ருக்கு வாழ்த்து மடலினை வழங்கினார்கள். திரு.எஸ்.சேதுமாதவன் இந்நூலின் சிறப்புப்பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.


